திருநெல்வேலியில் நாளை(மே 6) முக்கிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்
இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “நெல்லை சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், வடக்கு மற்றும் தெற்கு பைபாஸ் சாலை, வண்ணாரப்பேட்டை முழுவதும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. அதே போல் இளங்கோ நகர், பரணி நகர், நெல்லை சந்திப்பு முதல் மேரி சார்ஜென்ட் பள்ளி வரையிலான திருவனந்தபுரம் சாலை, பாளை புதுப்பேட்டை தெரு, சுப்பிரமணியபுரம், மாருதி நகர், பெருமாள் பட்டி, மாங்குடி, இனம் கோவில்பட்டி, அருகன்குளம் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
செந்தட்டியாபுரம், எட்டிச்சேரி, தென்மலை, அ.சுப்பிரமணியபுரம், இடையான்குளம், முறம்பு, ஆசிலாபுரம், கூடங்குளம், பருவக்குடி, புந்தபுளி, பி.ரெட்டியார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. சோலைச்சேரி, வேலாயுதபுரம், ஆலங்குளம், ஆலடிப்பட்டி, நல்லூர், சிவலார்குளம், ஆண்டிப்பட்டி, ஐந்தான் கட்டளை, தூத்திகுளம், கல்லூத்து உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. குருவன்கோட்டை, குறிப்பான்குளம், அத்தியூத்து, குத்தப்பாஞ்சான், மாயமான்குறிச்சி, கோதைசேரி, வன்னியன்குடியிருப்பு,சிங்கிகுளம், களக்காடு, காடுவெட்டி, வடமலைசமுத்திரம், கள்ளிகுளம், மீனவன்குளம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
மாதாந்திர பராமரிப்பு பணி முடிந்தவுடன் மின்விநியோகம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வள்ளியூர், செம்பாடு, கிழவனேரி, சமாதானபுரம், வடலி விளை, ஏர்வாடி, திருக்குறுங்குடி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மாவடி, தெற்கு வள்ளியூர், பணகுடி, லெப்பை குடியிருப்பு, புஷ்பவனம், குமாந்தான், காவல்கிணறு, சிவகாமிபுரம், தளவாய்புரம், பாம்பன் குளம், கலந்தபனை,கடம்பன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது மாதாந்திர பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின்விநியோகம் வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Power Shutdown, Tirunelveli