முகப்பு /திருநெல்வேலி /

நெல்லையில் இன்று மின் தடை அறிவிப்பு.. உங்க ஏரியா இருக்கானு தெரிஞ்சுக்கோங்க!

நெல்லையில் இன்று மின் தடை அறிவிப்பு.. உங்க ஏரியா இருக்கானு தெரிஞ்சுக்கோங்க!

மின் தடை

மின் தடை

Tirunelveli powercut | நெல்லையில் இன்று மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tirunelveli, India

நெல்லை மாவட்டத்தில் உள்ள எந்த பகுதிகளில் மே 9ஆம் தேதி மின்தடை ஏற்படும் என்ற அறிவிப்பை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

அதன்படி பராமரிப்பு பணி காரணமாக பாரதி நகர் ஆசிர்வாதம் நகர் எஸ் டி சி மெயின் ரோடு ஜோசப் தெரு பீட்டர்தெரு சென்மேரிஸ் தெரு நீச்சல் குளம் தெரு பெருமாள்புரம் சிகாலனி ஆகிய பகுதிகளுக்கு காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

திருநெல்வேலி டவுன் பிரிவுக்கு உட்பட்ட வடக்கு ரதவீதி ,வடக்கு மவுண்ட் ரோடு,( போத்தீஸ் பின்புறம் உள்ள நயினார் குளம் சாலை ) மற்றும் சுற்று வட்டார பகுதிக்கு செல்லும் மின் பாதையில் சாலை விரிவாக்க பணிக்காக காலை 09.00 மணி முதல் பணிகள் முடியும் வரை மின்விநியோகம் இருக்காது பணிகள் முடிந்ததும் உடனடியாக மின் விநியோகம் வழங்கப்படும்.

இதையும் படிங்க | பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் : பாளையங்கோட்டை சிறையில் இத்தனை பேர் தேர்ச்சியா?

பெருமாள் புரம் பிரிவு க்கு உட்பட்ட பாரதிநகர்,சாரள்தக்கர் கல்லூரி சாலை மற்றும் சுற்று வட்டார பகுதிக்கு , செல்லும் மின் பாதையில் ஏற்கனவே உள்ள பீங்கான் வட்டு ( disck ) மற்றும் பீங்கான் முள்சுருள் ( Pininsulater ) அகற்றிவிட்டு இயற்கை இடர்பாடுகளின் போது முடிந்த வரை மின் வினியோகத்தை பாதிக்காமல் இருக்கும் பாலிமர் வட்டு ( disck )மற்றும் பாலிமர் முள்சுருள் ( Pininsulater) மாற்றும் பணிக்காக மின்னோட்டம் நிறுத்தப்பட்டதிலிருந்து பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Power cut, Shutdown, Tirunelveli