முகப்பு /திருநெல்வேலி /

அரசு வேலைக்கு கணினி படிப்பு இவ்வளவு முக்கியமா?

அரசு வேலைக்கு கணினி படிப்பு இவ்வளவு முக்கியமா?

X
நெல்லை

நெல்லை பயிற்சியாளர்

Tirunelveli jobs | அரசு பணிகளுக்கு சேர விரும்புவோருக்கு கணினி படிப்பு மிகவும் முக்கியம் எனறு திருநெல்வேலியை சேர்ந்த பயிற்சியாளர் கூறுகிறார்.

  • Last Updated :
  • Tirunelveli, India

அரசு பணிகளுக்கு சேர விரும்புவோர் ஆபீஸ் ஆட்டோமேசன் எனப்படும் கணினி சான்றிதழ் படிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் சுற்றுலா அலுவலர் மற்றும் உதவி சுற்றுலா அலுவலர் பணிகளுக்கு கணினி சான்றிதழ் தேர்ச்சி கட்டாயம் ஆகும்.

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 போன்ற தேர்வுக்கு கணினி சான்றிதழ் தகுதி தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றாலும், அவர்கள் தேர்ச்சி பெறும் வகையில், பணி நிரந்தரம் என்பது அரசு கணினி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆபீஸ் ஆட்டோமேசன் என்றால் என்ன என்பது குறித்து அதன் பயிற்சியாளர் ஜெயராஜன் நம்மிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். இந்த சான்றிதழ் படிப்பை தொழில்நுட்ப கல்வி இயக்கம் சார்பில் அரசு நடத்துகிறது. இதன் பயன்கள் டிஎன்பிஎஸ்சி நீதிமன்றம் போன்ற அரசு வேலை பெறுவதற்கு இந்த படிப்பு மிக முக்கியமானது.இதற்குகாரணம் அலுவலகங்களில் கணினியின் பயன்பாடாகும்.

இதையும் படிங்க | சுருக்கெழுத்து பயின்றால் இவ்வளவு வேலை வாய்ப்புகளா? நெல்லை சுருக்கெழுத்து பயிற்றுனர் விளக்கம்!

இந்த படிப்பில் ஹார்டுவேர், ஆப்ரேட்டிங் சிஸ்டம் உள்ளிட்டவை தொடர்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் ms word, excel, power point போன்றவைகளும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. இதற்கு ஆறு மாதம் பயிற்சி அளிக்கப்படுகிறது. கல்வித் தகுதியாக இதற்கு 10 ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். டைப்ரைட்டிங்கில் இளநிலை அல்லது முதுநிலையில் தமிழ் அல்லது ஆங்கிலம் முடித்திருக்க வேண்டும். இதற்கான தேர்வுகள் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் நடத்தப்படுகின்றன. எனவே மாணவ மாணவிகள் இந்த கணினி சான்றிதழ் படிப்பை முடித்து அரசு அலுவலகங்களில் வேலையில் சேர வேண்டும் என்று தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Computer, Jobs, Local News, Nellai, Tirunelveli