ஹோம் /திருநெல்வேலி /

நெல்லையில் நூற்றாண்டை கடந்த பாண்டியர்களின் கோட்டை- வரலாற்று சிறப்புகள் தெரியுமா?

நெல்லையில் நூற்றாண்டை கடந்த பாண்டியர்களின் கோட்டை- வரலாற்று சிறப்புகள் தெரியுமா?

X
பாண்டியர்

பாண்டியர் கால கோட்டை

Tirunelveli | பாளையங்கோட்டையில் மேடை காவல் நிலையமாக பயன்படுத்தப்பட்ட பகுதி 8-ம் நூற்றாண்டில் பாண்டியர்கள் கோட்டையாக இருந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 8-வது நூற்றாண்டில் பாண்டியர்கள் கோட்டை அமைத்து ஆட்சி நடத்தி உள்ளனர். அதன்பிறகு பாளையக்காரர்களும், பின்பு ஆங்கிலேயர்களும் இந்த கோட்டையை நிர்வாக அலுவலகமாகவும், அதன் ஒரு பகுதியை சிறையாகவும் பயன்படுத்தி உள்ளனர்.இங்குதான் ஊமைத்துரையை சிறை வைத்துள்ளனர்.

பல வரலாற்று சிறப்புகளை கொண்டுள்ள இந்த கோட்டை பழங்கால ஆட்சியின் அடையாளமாக உள்ளது.பாளையங்கோட்டையில் பழங்கால கோட்டை கட்டிடத்தின் கீழ் பகுதியில் மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோயில், விநாயகர் கோயில் மற்றும் சில கடைகள் உள்ளன.இங்கு நீண்ட காலம் மேடை காவல் நிலையம் செயல்பட்டு வந்தது. மாவட்ட குற்றப்பிரிவு உள்ளிட்ட சில சிறப்பு பிரிவுகள் இங்கு இயங்கின.

நெல்லை அறிவியல் மையத்தில் காணும் பொங்கலையொட்டி குவிந்த மக்கள்..

இந்த கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது பசுமையான புல் தரைகள், செடிகள், அலங்கார விளக்குகள், இருக்கைகள், பெரிய டிஜிட்டல் திரைகள் ஆகிவற்றுடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது.

செய்தியாளர்: சந்தானம், திருநெல்வேலி.

First published:

Tags: Local News, Tirunelveli