முகப்பு /திருநெல்வேலி /

பருவநிலை மாற்றத்தால் பரவும் காய்ச்சல்- திருநெல்வேலி சித்த மருத்துவரின் அறிவுரை

பருவநிலை மாற்றத்தால் பரவும் காய்ச்சல்- திருநெல்வேலி சித்த மருத்துவரின் அறிவுரை

X
மாதிரிப்

மாதிரிப் படம்

Tirunelveli | காலநிலை மாற்றம் காரணமாக பரவி வரும் காய்ச்சலைத் தடுக்க இயற்கையான மருந்துகளை உட்கொண்டாலே போதும் என சித்த மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலியில் பகலில் கடும் குளிர், மதியம் அதிக வெயில் என மாறி மாறி காலநிலை இருந்து வருகிறது. இதனால் பலரும் நோய் பாதிப்புக்கு ஆளாகிவருகின்றனர். குறிப்பாக அதிக உடல் வலி, இருமல், சளி, தலைவலி, காய்ச்சல் பாதிப்புகள் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

திருநெல்வேலியில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி வருவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவ்வகை காய்ச்சல் எளிதில் அனைவருக்கும் தொற்றுவதால் பாதிக்கப்பட்டவர் அருகில் சென்றாலே பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதாக தெரிகிறது. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள முதியோர், குழந்தைகள், சர்க்கரை, இதயம், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் எளிதில் பாதிக்கப்படுகின்றனர்.

பாதிப்பு ஏற்படாமல் இருக்க விழிப்புடன் இருப்பது அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். மாநகராட்சி சார்பில் காய்ச்சலைத் தடுக்க வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

சித்த மருத்துவர்

இந்நிலையில் காலநிலை மாற்றம் காரணமாக பரவி வரும் காய்ச்சலை தடுக்க இயற்கை மருந்துகளை உட்கொண்டாலே போதும் என சித்த மருத்துவரும் அரசு சித்த மருத்துவக் கல்லூரி இணை பேராசிரியருமான சுபாஷ் சந்திரன் தெரிவித்துள்ளார்.

புத்தகத் திருவிழாவுக்கு வாசகம் - திருநெல்வேலி ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

இதுகுறித்து பேசிய அவர், ‘பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் விஷயங்களால் நமது உடல் நிலையும் பாதிக்கும். இதனால் சளி, இருமல், காய்ச்சல், காது வலி, உடல் வலி உள்ளிட்டவை ஏற்படுகின்றன. இதற்கு இயற்கையான மருந்துகளை உட்கொண்டாலே போதும். அதனையும் மருத்துவர் ஆலோசனைப்படி பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Tirunelveli