முகப்பு /திருநெல்வேலி /

நெல்லை மக்கள் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் - பிரிவு உபச்சார விழாவில் விஷ்ணு ஐஏஎஸ் பேச்சு

நெல்லை மக்கள் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் - பிரிவு உபச்சார விழாவில் விஷ்ணு ஐஏஎஸ் பேச்சு

X
திருநெல்வேலி

திருநெல்வேலி

Vishnu IAS : திருநெல்வேலியில் நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் நெல்லை மக்கள் எப்போது வேண்டுமானாலும் தன்னை சந்திக்கலாம் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருக்கும் விஷ்ணு தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராக இருந்த கார்த்திகேயன் ஐஏஎஸ் நெல்லைக்கு புதிய மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், திருநெல்வேலியில் உள்ள நேருஜி கலையரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவுக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. அதன்படி கலையரங்கம் வந்த மாவட்ட ஆட்சியருக்கு அனைத்து துறை உயர் அலுவலர்கள் சால்வை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் கலையரங்கம் உள்ளே சென்ற பிறகு திருநங்கையின் பரதநாட்டியம், வருவாய்த்துறை சார்பில் கும்மி பாட்டு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதனைத்தொடர்ந்து நெல்லையில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து வீடியோ வெளியிடப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு துறை சார்பிலும் அலுவலர்கள் அவரை பாராட்டி பேசி நினைவு பரிசு வழங்கினர். குறிப்பாக புத்தகங்களால் ஆன மாலை டிஜிட்டல் முறையில் செய்யப்பட்ட அவரின் புகைப்படம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

மேலும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நெல்லை மாவட்டத்தில் காணி, பழங்குடியினர், திருநங்கைகள், தாய்மார்கள், இளைஞர்கள் உள்ளிட்டோருக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதாக உயர் அலுவலர்கள் பேசினார். பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, “இங்கு வந்திருக்கும் ஒவ்வொரு முகங்களுக்கும் ஒரு கதை உண்டு. அதனால் தான் நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி. திருநெல்வேலியில் இருந்து பணியிட மாற்றம் கிடைத்துள்ளது. கொஞ்சம் உணர்வுப் பூர்வமாகத் தான் இருக்கிறது. இருப்பினும் பரவாயில்லை நான் அடிக்கடி இந்த மாவட்டத்திற்கு வருவேன். நெல்லை மக்களும் சென்னை வந்தால் என்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம்” என பேசினார்.

செய்தியாளர் : சந்தனகுமார் - திருநெல்வேலி

First published:

Tags: Local News, Tirunelveli