முகப்பு /திருநெல்வேலி /

பயிர் கடன் இலக்கு 14 ஆயிரம் கோடி.. வேளாண் பட்ஜெட்டுக்கு நெல்லை விவசாயிகள் மகிழ்ச்சி!

பயிர் கடன் இலக்கு 14 ஆயிரம் கோடி.. வேளாண் பட்ஜெட்டுக்கு நெல்லை விவசாயிகள் மகிழ்ச்சி!

X
மாதிரி

மாதிரி படம்

Tirunelveli News | தமிழ்நாடு விவசாயிகளுக்கு வரும் நிதியாண்டில் 14 ஆயிரம் கோடி அளவுக்கு கூட்டுறவு பயிர் கடன் வழங்கப்பட இருப்பதாக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பதற்கு நெல்லை விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

  • Last Updated :
  • Tirunelveli, India

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் விவசாயிகளுக்கான பயிர் கடன் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் இயந்திரங்கள் வாங்குவது போன்றவற்றிற்கு பெருமளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ் நிதியாண்டில் இதுவரை 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகளுக்கு கூட்டுறவுத்துறை மூலம் 12,648 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. இது கடந்து 10 ஆண்டுகளுக்கான சராசரியை விட 89 சதவீதம் அதிகம் ஆகும். இந்நிலையில், வரும் நிதியாண்டில் 14,000 கோடி அளவுக்கு கூட்டுறவு பயிர் கடன் வழங்கப்படும். இதுபோன்று ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றில் வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கூட்டுறவு கடனாக 1500 கோடி வழங்கப்படும்.

நிகழாண்டில் குருவை சம்பா கொள்முதல் பருவத்தில் இதுவரை 3 லட்சத்து 73 ஆயிரம் விவசாயிகளிடமிருந்து 27.23 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் நெல் கொள்முதல் செய்ய சன்னரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு கூடுதலாக ரூபாய் நூறு பொது ரக நெல்லுக்கு குவிடாலுக்கு கூடுதலாக ரூபாய் 75 ஊக்குத்தொகை வழங்கப்படும். இதற்காக 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : திருநெல்வேலியில் ‘ஸ்மார்ட் காவலர்’ செயலி.. போலீசாருக்கு பரிசு!

தமிழ்நாட்டில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பகுதிக்கேற்ற வேளாண் இயந்திரங்கள் வாங்கப்படும் இந்த இயந்திரங்கள் விவசாயிகள் தேவைக்கேற்ப வாடகை செயலுடன் இணைத்து வாடகைக்கு விடப்படும். இதற்கான நபார்டு வங்கி உதவியுடன் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கு திருநெல்வேலியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், தங்களுக்கு பட்ஜெட் திருப்தி அளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Local News, Tirunelveli, TN Budget 2023