தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் தோல் மருத்துவத்துறை, மாவட்ட தொழுநோய் அலுவலகம், தமிழ்நாடு தோல் மருத்துவர் சங்கம் இணைந்து ஒருங்கிணைத்த தேசிய தொழுநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் தலைமையில் மருத்துவர்கள், செவிலியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தொழுநோய் பிரிவில் சிறப்பாக பணியாற்றிய பயிற்சி மருத்துவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் வெகுமதி வழங்கினார்.
தொழுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புத்தகம் வெளியிடப்பட்டது. தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை மருத்துவர் நிர்மலா தேவி செய்திருந்தார். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செவிலியர்கள் பதாகைகளை ஏந்தியும் கோஷங்கள் எழுப்பியும் சென்றனர்.
இது குறித்து பேசிய மருத்துவர்கள், ‘தொழுநோய் யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம். அதன் அறிகுறிகள், சிவந்த தேமல், உணர்ச்சியின்மை, கை, கால் மரத்துப் போகுதல், ஆறாத விரல் தோல் தடித்து கட்டிகள் மற்றும் தடுப்புகள் உண்டாக்குதல் ஆகும். தொழுநோயை கூட்டு மருந்து சிகிச்சையின் மூலமாக சுலபமாக குணப்படுத்த முடியும்.
இது அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக கிடைக்கும். கை, கால், மதமதப்பு உள்ளவர்கள் சூடான மற்றும் கூர்மையான பொருட்களை கவனத்துடன் கையாள வேண்டும். கை கால் ஊனக் குறைப்பாட்டை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் சிறிய அறுவை சிகிச்சை மூலம் சரி பண்ண முடியும். இதற்காக அரசாங்கம் ஊக்கத்தொகை அளிக்கிறது.
பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் நூற்றாண்டு சிறப்புக் கண்காட்சி- ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirunelveli