முகப்பு /திருநெல்வேலி /

நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க வேண்டிய நிலையில் நெல்லை! - பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன?

நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க வேண்டிய நிலையில் நெல்லை! - பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன?

X
நிலத்தடி

நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க வேண்டிய நிலையில் நெல்லை

Tirunelveli District News | திருநெல்வேலி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்க வேண்டிய நிலையில் இருப்பதால், பொதுமக்களும், அரசாங்கமும் அதற்காக விழிப்புடன் செயலாற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்த பகுதிகளில் நெல்லை மாவட்டமும் ஒன்று என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்திருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த பட்டியலில் நெல்லை மாவட்டமும் இருப்பதாக, நீர்வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. மீதமுள்ள 17 மாவட்டங்களில் நீர்மட்டத்தில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தின் சராசரி நீர்மட்டம் கடந்த 2022 பிப்ரவரியில் 2.28 மீட்டராக இருந்தது. அது இந்த ஆண்டு 2023 பிப்ரவரியில் 5.31 மீட்டராக இருக்கிறது. அதாவது 3.03 மீட்டர் ஆழத்துக்கு நீர்மட்டம் சென்றுள்ளது.

இதுகுறித்து. சேரன்மகாதேவியை சேர்ந்த விவசாயி சங்கர் கூறுகையில், “நிலத்தடி நீர்மட்டம் பெருமளவில் நெல்லையில் குறைந்துள்ளது. இது விவசாயிகளுக்கு மிகுந்த கவலையையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு மழையானது, சராசரி மழை அளவை விட குறைவாக பெய்துள்ளது என்பது ஒரு காரணம். மற்றொன்று பெய்த மழையையும் நாம் சரியாக சேகரிக்கவில்லை தனிநபர்களாக இருக்கட்டும், நிறுவனங்களாக இருக்கட்டும் ஆழ்துளை கிணறுகளை அதிக அளவில் பயன்படுத்துவதால் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

இதையும் படிங்க : தந்தையை நோக்கி கள்ளத் துப்பாக்கியால் சுட்ட மகன்... வேதாரண்யத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

இதனை சரிப்படுத்த விவசாயிகள் ஒன்றிணைந்து நிறைய இடங்களில் பண்ணை குட்டைகள் அமைத்துள்ளனர். அந்த நீரை கிணறுகளிலும் ஆழ்துளை கிணறுகளிலும் நிரம்பி இருப்பதை நாம் இப்போது கண்கூடாக பார்க்கிறோம். தனிநபராக பொதுமக்கள் நாம் அனைவரும் ஒன்றிணைந்து மழை நீரை சேகரிக்க வேண்டும். அரசாங்கம் தரப்பில் மழை வருவதற்கு முன்பே குளங்களை தூர்வாரி தண்ணீரை சேகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது இருப்பினும் இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க கூடுதலாக அரசு கவனம் செலுத்த வேண்டும்” என அவர் கூறினார்.

First published:

Tags: Local News, Tirunelveli