முகப்பு /செய்தி /திருநெல்வேலி / நெல்லையில் 2 அடி உயரத்தில் கழிவுநீர் கால்வாய்: பள்ளத்தில் மூழ்கிய வீடு மற்றும் கடைகள்...

நெல்லையில் 2 அடி உயரத்தில் கழிவுநீர் கால்வாய்: பள்ளத்தில் மூழ்கிய வீடு மற்றும் கடைகள்...

 2 அடி உயரத்தில் கட்டப்படும் கழிவுநீர் கால்வாய்

2 அடி உயரத்தில் கட்டப்படும் கழிவுநீர் கால்வாய்

திருநெல்வேலியில் கழிவுநீர் கால்வாய் சுவரால் கடைகளின் சட்டர்களை திறந்து மூட முடியாமல் கடைக்காரர்கள் பெரும் சிரமம் அடையும் சூழல் உள்ளது.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாநகர் குற்றாலம் ரோடு பகுதியில் தரையில் இருந்து 2 அடி உயரத்தில் கழிவுநீர் கால்வாய், காண்கீரிட் சுவர் அமைக்கப்பட்டுள்ளதால் வீடு மற்றும் கடைகள் பள்ளத்திற்கு சென்றன.

திருநெல்வேலி வழுக்கோடை முதல் தொண்டர் நயினார் கோயில் வரை உள்ள 2 கிலோமீட்டர் தொலைவிற்கு, ஆறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதே பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கான பணிகளும் தொடக்கப்பட்டு கான்கீரிட் சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

சாலையின் உயரத்தை கூட்ட திட்டமிட்ட மாநகராட்சி நிர்வாகம், அதை கருத்தில் கொண்டு கழிவுநீர் கால்வாயின் உயரத்தையும் உயர்த்தியுள்ளது. தரை மட்டத்திலிருந்து 2 அடி உயரத்திற்கு உயர்த்தி அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் சுவரால் கடைகளின் சட்டர்களை திறந்து மூட முடியாமல் கடைக்காரர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

top videos

    எனவே தற்போது அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் சுவரை இடித்து, கால்வாயின் உயரத்தை குறைத்து கட்டி தர வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வழியாக பயணிக்கும் நிலையில் பள்ளங்களை கூட மூடாமல் தேவையில்லாத பணிகளை நெடுஞ்சாலை நிர்வாகம் செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    First published:

    Tags: Thirunelveli