முகப்பு /திருநெல்வேலி /

உடனே நடவடிக்கை எடுங்க.. அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நெல்லை மாநகராட்சி ஆணையர்!

உடனே நடவடிக்கை எடுங்க.. அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நெல்லை மாநகராட்சி ஆணையர்!

அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நெல்லை மாநகராட்சி ஆணையர்

அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நெல்லை மாநகராட்சி ஆணையர்

Tirunelveli News : பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு நெல்லை மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த முகாமில் நெல்லை மண்டலம் பாட்டபத்து தேவிபுரம் பொதுமக்கள் அளித்த மனுவில் தேவிபுரத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது பாதையில் இருந்த கழிவுநீர் வடிகாலில் மண் கொண்டு அடைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.

இதனால், குடியிருப்புகளின் கழிவு நீர் தேவிபுரம் தெருவுக்கு மத்தியில் செல்கிறது. இதனால், இப்பகுதி அனைத்து பொதுமக்களுக்கும் சுகாதார சீர்கேடு மற்றும் நோய் தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், வடிகாலில் உள்ள மண்ணை அகற்றிட,வலியுறுத்தினர்.

இந்நிலையில், தச்சல்லூர் மண்டலம் சீனியப்பன் திருத்து பகுதியைச் சேர்ந்த ஜிந்தா பாபு மற்றும் கமாலுதீன் கான் ஆகியோர் அளித்த மனுவில். கரீஷ்மா தைக்கா பள்ளிவாசலுக்கு பாதியப்பட்ட இடத்தில் சுமார் மூன்று சென்ட் மட்டும் தரை வாடகைக்கு வாங்கி, சிறு கடை கட்டி உள்ளோம். மாநகராட்சி நிர்வாகம் கடையைக் கட்ட அனுமதி பெறவில்லை என நோட்டீஸ் வழங்கியுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் உரிய அனுமதி அளிக்கும் பட்சத்தில் அதற்குரிய கட்டணத்தை செலுத்த தயாராக உள்ளோம்என்றுதெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வி.எம்.சத்திரம் கிளைச் செயலாளர் கனகமணி என்பவர் அளித்த மனுவில்,தங்கள் பகுதியில் முன்னுரிமை அடிப்படையில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றிடவும் கழிவுநீர் கால்வாய் அமைக்கவும் கொசு மருந்து அடித்திடவும் . கோரிக்கை வைத்தார். இதுபோன்ற மனுக்களை மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார் பின்னர் அவர் மனுக்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுத்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

top videos
    First published:

    Tags: Local News, Tirunelveli