முகப்பு /திருநெல்வேலி /

தேசிய அளவிலான கணித போட்டியில் பாளையங்கோட்டை மாணவர்கள் சாதனை.. நேரில் அழைத்து பாராட்டிய நெல்லை ஆட்சியர்..

தேசிய அளவிலான கணித போட்டியில் பாளையங்கோட்டை மாணவர்கள் சாதனை.. நேரில் அழைத்து பாராட்டிய நெல்லை ஆட்சியர்..

X
மாணவர்களை

மாணவர்களை வாழ்த்திய நெல்லை கலெக்டர்

Tirunelveli News | சென்னை ஐஐடி கணிதத்துறை சார்பில் நடைபெற்ற கணித போட்டியில் வெற்றி பெற்ற பாளையங்கோட்டை வேல்ஸ் வித்யாலயா பள்ளி மாணவர்களை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.

  • Last Updated :
  • Tirunelveli, India

சென்னை ஐஐடி கணிதத்துறை சார்பில் போரேஸ் 2023 என்ற தலைப்பில் கணித போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்தும் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அதன்படி, பாளையங்கோட்டை வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் ஜெய்சன் இளமாறன், லிசாந்த் ஏழாம் வகுப்பு மாணவர் கார்த்திவர்மன் ஆகியோர் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.

இதேபோல் பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டியூட் அறிவியல் மையத்தில் நடைபெற்ற போட்டியிலும். பாளையங்கோட்டை பள்ளி மாணவர்கள் முதல் பரிசு பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் ஆகியோர் பாராட்டினர். பள்ளி தாளாளர் செந்தில் பிரகாஷ் இயக்குனர் திலகவதி கல்விசார் டீன் சுவாமிநாதன், முதல்வர் சுகந்தி சொர்ணலதா ஆகியோரும் பாராட்டி பரிசுகளை வழங்கினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்நிலையில், போட்டியில் கலந்து கொண்டது தங்களுக்கு பல்வேறு அனுபவங்களை தந்ததாகவும் முதல் பரிசு பெற்றது மகிழ்ச்சியாக உள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் தங்களை ஊக்கப்படுத்தியதால் பல்வேறு போட்டிகளில் இனி கலந்து கொண்டு வெற்றி பெறுவோம் எனவும் தங்களின் பள்ளி நிர்வாகத்திற்கு நன்றி என்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.

    First published:

    Tags: Local News, Tirunelveli