முகப்பு /திருநெல்வேலி /

புத்தகத் திருவிழாவுக்கு வாசகம் - திருநெல்வேலி ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

புத்தகத் திருவிழாவுக்கு வாசகம் - திருநெல்வேலி ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

X
மாதிரிப்

மாதிரிப் படம்

Tirunelveli book fair | திருநெல்வேலியில் புத்தகத் திருவிழாவிற்கு வாசகம் எழுதும் போட்டிக்கு படைப்புகளை அனுப்ப பிப்ரவரி 23ஆம் தேதி கடைசி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி புத்தகத் திருவிழாவை ஒட்டி வாசகம் எழுதும் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் பிப்ரவரி 23-ம் தேதிக்குள் படைப்புகளை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘பொருநை நெல்லை ஆறாவது புத்தகத் திருவிழா பிப்ரவரி 25 முதல் மார்ச் 7ஆம் தேதி வரை பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நடைபெற உள்ளது.

பன்முகத்தன்மையை போற்றும் வகையில் அனைவருக்குமான விழாவாக இத்திருவிழா நடைபெற உள்ளது. இப்புத்தகத் திருவிழாவுக்கான கருத்துகளை உள்ளடக்கி வாசகங்கள் எழுதும் போட்டி நடைபெறுகிறது.

இப்போட்டிக்கு வாசகங்கள் மேற்படி கருத்தை உள்ளடக்கியதாகவும் சுமார் நான்கு அல்லது ஐந்து வார்த்தைகளுக்கு மிகாமலும் பிறமொழி கலப்பில்லாமலும் படைப்பாளிகளின் சொந்த கருத்தாகவும் இருக்க வேண்டும்.

போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவர், மாணவிகள் உள்ளிட்ட பொதுமக்கள் யாவரும் கலந்து கொள்ளலாம். போட்டிக்கான வாசகங்களை படைப்பாளியின் முகவரி, தொடர்பு எண் ஆகிய விவரங்களுடன் பிப்ரவரி 23ஆம் தேதி மாலை 5 மணிக்குள் porunainellaifest@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் முதல் மூன்று வாசகங்களுக்கு புத்தகத் திருவிழாவில் பரிசுகள் வழங்கப்படும்.

”தப்பா பேசுறாங்க... நடந்தது இதுதான்”- பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான தென்காசி பெண் ரயில்வே ஊழியர் விளக்கம்!

முதலிடம் பிடிக்கும் வாசகமானது இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவின் கருப்பொருள் வாசகமாக பயன்படுத்தப்படும் என செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Tirunelveli