திருநெல்வேலி மாவட்டத்தில் கூனியூர், காருக்குறிச்சி ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் பரம்பரை பரம்பரையாக தொழிலாளர்கள் மண் பானை, பூச்செட்டிகள் உள்ளிட்டவற்றை பாரம்பரிய முறைப்படி செய்து வருகின்றனர். குறிப்பாக கூனியூர் கிராமத்தில் நிறைய குடும்பங்கள் இந்த பானை தொழிலையே ஆண்டாண்டு காலங்களாக செய்துவருகின்றனர்.
இந்த தொழில் குறித்து பானை செய்யும் தொழிலாளி ரமேஷிடம் பேசினோம். அப்போது அவர், மண்பானை, பூச்செட்டிகள் செய்யும் முறையை விளக்கிப் பேசினார்.
இதுகுறித்து பேசிய அவர், ‘முதல் நாளில் கரம்பை மண்ணை நன்றாக காய வைத்து தூசி தட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை ஊற வைக்க வேண்டும். தூசி தட்டிய பிறகு கரம்பை மண்ணை தனியாக போட்டு அதன் மீது தண்ணீர் ஊற்றி ஈரப்பதமாக்க வேண்டும். சுமார் 4 மணி நேரம் வரை கரம்பை மண்ணில் ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இரண்டாம் நாள் ஈரப்பதத்தோடு இருக்கும் கரம்பை மண்ணை மெஷினில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு முன்பு பானை தொழிலாளர்கள் மண்ணை காலால் மிதித்தனார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இயந்திரக் காலமானதால் மெஷினில் போட்டு அரைக்கின்றனர். அரைத்த கரம்பை மண்ணை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிலிருந்து இரண்டு மணி நேரம் கழித்து கரம்பை மண் பானை அல்லது பூந்தொட்டி தயாரிப்பிற்கு ரெடியாகிவிடும். தொடர்ந்து பானை தொழிலாளர்கள் பூந்தொட்டி பானைகளை தங்கள் கைகளால் வடிவமைக்கின்றனர். அந்தப் பானைகளை அல்லது பூந்தொட்டிகளை மூன்று கட்டங்களாக காய வைக்கின்றனர்.
அப்பொழுது பூந்தொட்டி பானைகளில் தேவைப்படும் டிசைன்களை சேர்த்துக் கொள்கின்றனர். இரண்டாம் நாள் முழுவதும் தாங்கள் தயார் செய்த பானை அல்லது பூந்தொட்டிகளை காய வைக்கின்றனர். மூன்றாவது நாள் தொழிலாளர்கள் தாங்கள் தயார் செய்த பானை அல்லது பூந்தொட்டிகளை சுட்டெடுக்கின்றனர். பானைகளை சுட்டெடுக்கும் இடத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட பானைகளை வைத்துக் கொள்ளலாம்.
அதன் மேல் வைக்கோலை வைத்து களிமண்களை போட்டு பூசிக்கொள்ள வேண்டும். அதன் கீழே விறகை வைத்து எரித்துக் கொள்ள வேண்டும். கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து பானைகளை இறக்க வேண்டும். அப்பொழுது பானைகள் தயாராகிவிடும்.
உணவில் கலப்படமா? திருநெல்வேலியில் செயல்படும் நடமாடும் உணவு பரிசோதனை வாகனம்
கஷ்டப்பட்டு ஒரு மாதம் காத்திருந்து பானைகளை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்தால் 100 ரூபாய்க்கு பானைகளைக் கேட்டு பேரம் பேசுவதாக வருத்தம் தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirunelveli