முகப்பு /திருநெல்வேலி /

ஒன்றாக நிற்கும் 100 ஆண்டு பழமையான அரச மரம், வேப்ப மரம்- திருநெல்வேலி அரசரடி விநாயகர் கோவில் சிறப்புகள்

ஒன்றாக நிற்கும் 100 ஆண்டு பழமையான அரச மரம், வேப்ப மரம்- திருநெல்வேலி அரசரடி விநாயகர் கோவில் சிறப்புகள்

X
அரசரடி

அரசரடி கோவில்

Tirunelveli | திருநெல்வேலியில் 100 ஆண்டுகள் பழமையான அரச மரமும், வேப்ப மரமும் ஒன்றிணைந்து உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலியில் பிரசித்தி பெற்ற அரசரடி வெற்றி விநாயகர் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் வெற்றி விநாயகர் உடன் பாலசுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்பாள் ஆகிய கடவுள்களும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இங்கு சிறப்பு என்னவென்றால் வெற்றி விநாயகர் பின்புறம் உள்ள பிரகாரத்தில் 100 வருடங்கள் பழமையான அரச மரமும் வேப்ப மரமும் இணைந்து பின்னி இருக்கிறது.

இந்த மரங்களுக்கு கீழ் ஸ்ரீ வல்லவ கணபதி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நாகங்களின் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. இந்த மரங்களுக்கு கீழ் உள்ள விநாயகருக்கு கார்த்திகை சோமவாரம் அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும்.அதேபோல் நாகங்களின் சிலைக்கு ஆடி மாசம் கருட பஞ்சமி அன்று சிறப்பு பூஜைகள் நடக்கும்.

அரசரடி விநாயகர் 

விநாயகருக்கு கார்த்திகை சோமவாரம் அன்று பக்தர்கள் திருமணமாக வேண்டும் என மஞ்சள் போட்டு கற்கண்டு, வெத்தலை பாக்கு, விநாயகருக்கு வைத்து சாமி தரிசனம் செய்வார்கள். அதே போல் பக்தர்கள் தங்களது கைகளால் விநாயகருக்கு விபூதி சந்தனம் உள்ளிட்டவைகளை வைத்து அபிஷேகம் செய்வார்கள்.

இணைந்து நிற்கும் மரங்கள்

இவ்வாறு செய்தால் திருமண பாக்கியம் நிறைவேறும். திருமணம் முடிந்தவர்களுக்கு குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என கோயில் குருக்கள் தெரிவித்தார்.

ஜனாதிபதி முர்மு நாளை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை.. மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..

மேலும் இந்த மரங்களுக்கு கீழ் உள்ள நாகங்களின் சிலைகளுக்கு ஆடி மாசம் கருட பஞ்சமி அன்று பக்தர்கள் கருவுடையான் நோன்பு இருப்பார்கள். அதாவது தங்கள் உடன் பிறந்தவர்கள் நன்றாக இருக்க வேண்டி நாகங்களின் சிலைகளுக்கு பக்தர்கள் சிறப்பு பூஜை செய்து வழிபடுவார்கள். அவ்வாறு செய்தால் உடன்பிறந்தவர்கள் நன்றாக இருப்பார்கள் என்பது ஐதீகம்.

First published:

Tags: Local News, Tirunelveli