முகப்பு /திருநெல்வேலி /

நெல்லை அரசரடி வெற்றி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விழாவில் குவிந்த பக்தர்கள்..

நெல்லை அரசரடி வெற்றி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விழாவில் குவிந்த பக்தர்கள்..

X
அரசரடி

அரசரடி வெற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா

Tirunelveli News | நெல்லை அரசரடி வெற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் அமைந்துள்ள அரசரடி வெற்றி விநாயகர் திருக்கோயிலானது மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். தினமும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த அரசர் அடி வெற்றி விநாயகர் திருக்கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. இதில் சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. மேல தாளங்கள் முழங்க வான வேடிக்கையுடன் கோபுர கலசத்திற்கு புனித நீர் எடுத்து வரப்பட்டு அதன் மேல் ஊற்றப்பட்டது.

தொடர்ந்து பக்தர்கள் மேல் புனித நீர் தெளிக்கப்பட்டது. விநாயகர் நவக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. விழா ஏற்பாடுகள் கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

First published:

Tags: Hindu Temple, Local News, Tamil News, Tirunelveli