முகப்பு /திருநெல்வேலி /

திருச்செந்தூர் - நெல்லை ரயில் பயண நேரம் குறைகிறது.. மகிழ்ச்சியில் பயணிகள்!

திருச்செந்தூர் - நெல்லை ரயில் பயண நேரம் குறைகிறது.. மகிழ்ச்சியில் பயணிகள்!

X
மாதிரி

மாதிரி படம்

Tiruchendur - Nellai Train : திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையிலான ரயிலின் பயண நேரம் குறைக்கப்படுகிறது. இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையேயான அகல பாதையில் மின்சார ரயில் இயக்கப்படும் நிலையில் பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி திருச்செந்தூர் இடையேயான சுமார் 61 கிலோமீட்டர் தொலைவு ரயில் பாதை அகல ரயில் பாதையாகவும் முழுவதும் மின்மயமாக்கவும் மாற்றப்பட்டுள்ளது. சோதனை ஓட்டங்கள் முடிக்கப்பட்ட நிலையில் மின்சார எஞ்சினில் ரயில்களை இயக்கி பயண நேரத்தை குறைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வந்தனர்.

இதை எடுத்து ஏப்ரல் 1 முதல் திருநெல்வேலி திருச்செந்தூர் மார்க்கத்தில் இயங்கும் ரயில்களின் வேகத்தை அதிகரித்து பயண நேரத்தை குறைக்கவும், செந்தூர் விரைவு ரயிலின் பயண நேரத்தை சுமார் ஒரு மணி நேரம் வரை குறைக்கவும் தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் முன்னோட்டமாக திருநெல்வேலி திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில்கள் மின்சார எஞ்சினில் இயக்கப்பட்டன ஆனால் நேரத்தில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த ரயில் இனிமேல் முழுமையாக மின்சார என்ஜின் மூலம் இழுத்து செல்லப்படுகிறது. அதனால் நெல்லைக்கு காலை 4.55 மணிக்கு வந்தவுடன் மீண்டும் 5 மணிக்கு திருச்செந்தூர் நோக்கி புறப்பட்டு செல்கிறது. திருச்செந்தூருக்கு 6.50 மணிக்கு சென்றடைவதாக கால அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் 1 மணி 10 நிமிடங்கள் பயண நேரம் குறைகிறது. இதனால், ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

top videos
    First published:

    Tags: Local News, Southern railway, Tirunelveli