முகப்பு /திருநெல்வேலி /

பிளஸ் 2 பொதுத்தேர்வு..! நெல்லை மாவட்டத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்ட 7 பறக்கும்படையினர்..

பிளஸ் 2 பொதுத்தேர்வு..! நெல்லை மாவட்டத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்ட 7 பறக்கும்படையினர்..

X
பிளஸ்

பிளஸ் 2 பொதுத்தேர்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு பொது தேர்வு 73 மையங்களில் நடைபெற்றது. மாவணவர்கள் உற்சாகமாக தேர்வெழுதினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்டத்தில் 10,315 மாணவர்கள், 11,439 மாணவிகள் என மொத்தம் 21,754 பேர் பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதினர். தமிழ்நாடு முழுவதும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு தொடங்கியுள்ளது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு பொது தேர்வு 73 மையங்களில் நடைபெற்றது. தனித் தேர்வர்களுக்காக, பாளையங்கோட்டை மத்திய சிறை உள்ளிட்ட நான்கு மையங்களில் தேர்வு நடைபெற்றது.

நெல்லை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 184 பள்ளிகளைச் சேர்ந்த 10,315 மாணவர்கள் 11,439 மாணவிகள் என மொத்தம் 21,754 பேர் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதினர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான வினாத்தாள்கள் சென்னையில் இருந்து கொண்டுவரப்பட்டு ஐந்து மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. தேர்வு பணியில் சுமார் 1500 ஆசிரியர்கள் ஈடுபட்டனர். தேர்வில் முறைகேட்டை தடுக்கும் வகையில் முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட கல்வித்துறை அலுவலர்கள் அடங்கிய ஏழு பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டன.

Read More : மனைவியை கொலை செய்துவிட்டு கேஷுவலாக வேலைக்கு சென்ற கணவன்.. வாக்குமூலத்தால் அதிர்ந்த போலீசார்..!

இந்த குழுவினர் மாவட்ட முழுவதும் உள்ள பள்ளிகளில் திடீர் சோதனை நடத்தினர். இது தவிர தேர்வின் போது அனைத்து பள்ளிகளிலும் திடீர் சோதனை நடத்துவதற்கு நிற்கும் படை அமைக்கப்பட்டன. இந்த குழுவில் 184 பேர் இடம் பெற்றனர். மாவட்டத்திலுள்ள அனைத்து தேர்வு மையங்களிலும் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதாவது, கைப்பேசி உள்ளிட்டவை தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டன.

இதேபோல, திருநெல்வேலி மாவட்டத்தில் பதினொன்றாம் வகுப்பு பொது தேர்வு 8,609 மாணவர்கள் 11,172 மாணவிகள் என மொத்தம் 19,781 பேர் எழுதினர். இதற்காக நான்கு தனித்தேர்வர் மையங்கள் உட்பட மொத்தம் 73 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.

First published:

Tags: Local News, Tamil Nadu, Thirunelveli