முகப்பு /திருநெல்வேலி /

நெல்லை திரிபுராந்தீஸ்வரர் கோயிலில் 63 நாயன்மார்கள் வீதி உலா!

நெல்லை திரிபுராந்தீஸ்வரர் கோயிலில் 63 நாயன்மார்கள் வீதி உலா!

X
திரிபுராந்தீஸ்வரர்

திரிபுராந்தீஸ்வரர் கோயில்

Nellai temple | சித்திரை திருவிழாவின் சிகர நிர்வாக மே 2ஆம் தேதி காலை 7 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள  திரிபுரந்தீஸ்வரர் கோயிலின் சித்திரை திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி சுவாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகின்றன.

தொடர்ந்து திருவிழா நாட்களில் காலை, மாலைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 25ஆம் தேதி கற்பக மரம் தாமரைப்பூ வாகனத்திலும் 26 ஆம் தேதி பூத, சிம்ம வாகனத்திலும் சுவாமி அம்பாள் வீதி உலா வந்தனர் 27 ஆம் தேதி ரிஷப வாகனத்திலும் 28ஆம் தேதி இந்திர வாகனத்திலும் 29ஆம் தேதி யானை, அன்ன வாகனங்களிலும் சுவாமி அம்பாள் வீதி உலா வந்தனர். குறிப்பாக 63 நாயன்மார்கள் வீதி உலாவும் நடைபெற்றது.

மே ஒன்றாம் தேதி காலை 8 மணிக்கு வெள்ள சாத்தி கூத்தப் பெருமாள் வீதி உலாவும் காலை 10 மணிக்கு பச்சை சாத்தி வீதி உலாவும் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு கங்காள நாதர் தேர் வீதிகள் உலாவும் கைலாச பர்வத வாகனத்தில் சுவாமி, வெள்ளியங்கிரி வாகனத்தில் அம்பாள் வீதி உலாவும் நடைபெற உள்ளன.

விழாவின் சிகர நிர்வாக மே 2ஆம் தேதி காலை 7 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. 3ஆம் தேதி தீர்த்தவாரியும், 4ஆம் தேதி தெப்ப உற்சவம் நடைபெற உள்ளன. இந்த ஏற்பாடுகளை கோயில் செயலாளர் சுஜாதா மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Tirunelveli