முகப்பு /திருநெல்வேலி /

தேய்பிறை அஷ்டமியில் பைரவரை எப்படி வழிபட வேண்டும்? என்ன பலன்கள் தெரியுமா?

தேய்பிறை அஷ்டமியில் பைரவரை எப்படி வழிபட வேண்டும்? என்ன பலன்கள் தெரியுமா?

X
மாதிரி

மாதிரி படம்

Theipirai Ashtami | தேய்பிறை அஷ்டமி வழிபாடு செய்வதால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பது குறித்து திருநெல்வேலி திரிபுராந்தீஸ்வரர் கோவில் அர்ச்சகர் விளக்கம் அளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி திரிபுராந்தீஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு பைரவருக்கு விமர்சையாக நடைபெற்றது. இது குறித்து அர்ச்சகர் கூறுகையில், பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாவத்தை நீக்குபவர் என்று பொருளாகும்.ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவ வழிபாடு செய்ய உகந்த நாளாகும். அந்நாள் பைரவாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. அதிலும் தேய்பிறை அஷ்டமி கால பைரவாஷ்டமிக்கு கூடுதல் சிறப்பு உண்டு.

சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கானதாகும். ஒருவகையில் ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர், சிவனுடைய அம்சம் ஆவார். அஷ்ட பைரவர்களும் அவர்களுக்கான தேவிகள் அஷ்ட பைரவிகளும் Chris, ஸ்ரீ பைரவருக்கு பௌர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் பஞ்ச எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

அப்போது, 5 தனித்தனி அகல் எடுத்துக்கொண்டு, ஒரு அகலில் நல்லெண்ணெய் இன்னொரு அகலில் இலுப்ப எண்ணெய், மற்றொன்றில் விளக்கு எண்ணெய், அடுத்ததில் பசு நெய், அடுத்த அகலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி பைரவ சுவாமியை நோக்கி அகலின் திரிமுகம் வைத்து தனித்தனியாக ஏற்ற வேண்டும்.

ஒரு அகலில் இயற்றிய நெருப்பில் இருந்து இன்னொரு தீபம் ஏற்றக்கூடாது. இவ்வாறு தனித்தனியாக ஏற்றி வழிபட்டால் தீராத பிரச்சனைகளும் தீரும் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகளும் நீங்கும், நல்லருள் கிட்டும் என்று அவர் கூறினார்.

First published:

Tags: Local News, Temple, Tirunelveli