ஹோம் /திருநெல்வேலி /

நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை - வனத்துறை அறிவிப்பு

நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை - வனத்துறை அறிவிப்பு

மணிமுத்தாறு அருவி

மணிமுத்தாறு அருவி

Tirunelveli District | திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால் பல்வேறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதானல் மணிமுத்தாறு அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirunelveli, India

தமிழ்நாட்டில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. அதன்படி, திருநெல்வேலியில் மழைபெய்தது. மாவட்டத்தில் சேரன்மாதேவி, களக்காடு, அம்பாசமுத்திரம், ராதாபுரம் உள்ளிட்ட பல இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைப்பகுதியில் 11 மில்லி மீட்டர் மழை பெய்தது. சேர்வலாறு அணைப்பகுதியில் 6 மில்லி மீட்டரும், மணிமுத்தாறு அணைப்பகுதியில் 10.8 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டுவது வழக்கம். இந்த அருவியில் குளித்து மகிழ திருநெல்வேலிலி, தூத்துக்குடி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

Must Read : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் - பார்த்து என்ஜாய் பண்ணுங்க!

இந்நிலையில், கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

First published:

Tags: Falls, Local News, Tirunelveli