Union
Budget 2023

Highlights

ஹோம் /திருநெல்வேலி /

நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா - பிப்ரவரி 4ம் தேதி தீர்த்தவாரி

நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா - பிப்ரவரி 4ம் தேதி தீர்த்தவாரி

நெல்லையப்பர் கோவில்

நெல்லையப்பர் கோவில்

Nellaiappar Temple | திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா நாளை தொடங்குகிறது. தொடர்ந்து பிப்ரவரி 4ம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை (வியாழக் கிழமை) காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

அதனைத் தொடர்ந்து திருவிழவின் 4ஆம் நாளான 29ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு நெல்லுக்கு வேலியிட்ட திருவிழாவும், இரவு 8 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி, அம்பாள் வீதி உலாவும் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 4ஆம் தேதி தைப்பூச தீர்த்தவாரி நிகழ்ச்சி சிறப்புமிக்க நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தில் உள்ள தீர்த்தவாரி மண்டபத்தில் நடைபெறுகிறது.

இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக நெல்லையப்பர், காந்திமதியம்மன், அகஸ்தியர், தாமிரபரணி, குங்கிலிய நாயனார், சண்டிகேஸ்வரர், அஸ்திரதேவர் மற்றும் அஸ்திரதேவி ஆகியோர் 4ஆம் தேதி நண்பகல் 12.30 மணிக்கு சுவாமி நெல்லையப்பர் கோவிலில் இருந்து புறப்பட்டு எஸ்.என்.ஹைரோடு, ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ்பாலம் வழியாக கைலாசபுரத்தை வந்தடைவர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தாமிரபரணியில் தீர்த்தவாரி முடிந்து, தீபாராதனைக்கு பின்னர் மாலை 6 மணிக்கு சுவாமிகள் மீண்டும் புறப்பட்டு எஸ்.என். ஹைரோடு வழியாக பாரதியார் தெரு, தெற்கு புதுத்தெரு, ரத வீதி சுற்றி கோவிலுக்கு வந்தடைவார்கள்.

Must Read : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் - பார்த்து என்ஜாய் பண்ணுங்க!

பிப்ரவரி 5ஆம் தேதி சவுந்தர சபா மண்டபத்தில் பிருங்கி ரத முனி சிரேஷ்டர்களுக்கு திருநடனம் காட்டியருளும் சவுந்தர சபா நடராஜர் திருநடனக்காட்சி நடைபெறுகிறது. 6ஆம் தேதி சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சந்திர புஷ்கரணி என்ற வெளி தெப்பக்குளத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் இரவு 7 மணிக்கு தெப்பத்திருவிழா நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

First published:

Tags: Local News, Temple, Thaipusam, Tirunelveli