முகப்பு /திருநெல்வேலி /

பாளையங்கோட்டை சண்முகர் கோயிலில் தைப்பூச வழிபாடு..

பாளையங்கோட்டை சண்முகர் கோயிலில் தைப்பூச வழிபாடு..

X
பாளையங்கோட்டை

பாளையங்கோட்டை சண்முகர் கோயிலில் தைப்பூச வழிபாடு

Tirunelveli News : திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சண்முகர் கோயிலில் தைப்பூச வழிபாடு.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

பாளையங்கோட்டை அருகே உள்ள சண்முகர் கோயிலில் அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

கடவுள் முருகனுக்கு உகந்த நாள் தைப்பூசம். அதேபோல் பவுர்ணமி தினமாகும். திருநெல்வேலியில் தைப்பூசத்தையொட்டி முருகன் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் பாளையங்கோட்டை அருகே உள்ள சண்முகர் கோயிலில் அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஆன்மீக ஆலோசகர் மந்திரமூர்த்தி கூறுகையில், “தைப்பூசம் வரும் நாள் பெரிதும் பவுர்ணமி நாளாகும். அன்றைய நாளில் குழந்தைகளுக்கு காது குத்துதல், ஏடு தொடங்குதல் உள்ளிட்டவற்றை சிறப்பாக தொடங்கி வைப்பார்கள்.

முருகன் அடிகளார் காவடி எடுத்தல், கற்பூர செட்டி உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவர். தேவர்களும் அரசர்களும் போரில் தேவர்களால் அரசர்களை அழிக்க வேண்டி சிவனிடம் தேவர்கள் வழிபட அவர்களுக்கு தலைமை ஏற்க ஆற்றல் தலைவனை உருவாக்க வேண்டி உருவானவன் கந்தப்பெருமான் அன்னை பார்வதி தேவி ஆண்டி கோலத்தில் பழனியில் வீற்றிருக்கும் முருகனுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில் தான்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

முருகனின் அருளை பெற உகந்த நாள் இது சங்க கால தமிழ் மண்ணில் வேல் வழிபாடு சிறந்து இருந்தது. சிலப்பதிகாரத்தில் வேலுக்கு என தனி கூட்டமே இருந்தது பல தொன்மையான கோயில்களில் முருகனின் சிலையை இராது தைப்பூச நாளில் முருகனை நினைத்து விரதம் இருந்தால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்” என தெரிவித்தார்.

செய்தியாளர் : சந்தனகுமார் - பாளையங்கோட்டை

First published:

Tags: Local News, Tirunelveli