முகப்பு /திருநெல்வேலி /

சுருக்கெழுத்து பயின்றால் இவ்வளவு வேலை வாய்ப்புகளா? நெல்லை சுருக்கெழுத்து பயிற்றுனர் விளக்கம்!

சுருக்கெழுத்து பயின்றால் இவ்வளவு வேலை வாய்ப்புகளா? நெல்லை சுருக்கெழுத்து பயிற்றுனர் விளக்கம்!

X
சுருக்கெழுத்து

சுருக்கெழுத்து பயிற்றுனர்

Nellai short hand teacher | சுருக்கெழுத்து தேர்வு எழுத குறைந்தது 10ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் - சுருக்கெழுத்து பயிற்றுனர்.

  • Last Updated :
  • Tirunelveli, India

சுருக்கெழுத்து பயின்றால் எண்ணற்ற வேலை வாய்ப்புகள் உள்ளதாக நெல்லை சுருக்கெழுத்து பயிற்றுனர் இளங்கோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர்,  சுருக்கெழுத்தில் 5 நிலைகள் உள்ளன. தமிழ்நாடு அரசு வருடத்திற்கு இரண்டு முறை தேர்வுகள் நடத்தில் சான்றிதழ்களை வழங்குகின்றன. நீதிமன்றங்களில் சுருக்கெழுத்துப் பணி, பிரபல நிறுவனங்களில் அதன் தலைமை அதிகாரிக்கு குறிப்பெடுக்கும் பணி என்று வேலை வாய்ப்புகள், மிகப் பெரிய வழக்கறிஞர்கள் தனக்கென்று ஒரு சுருக்கெழுத்தாளரைப் பணியில் வைத்திருப்பார்கள். நீதிபதிகள் தீர்ப்புகளை தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ சொல்வதை சுருக்கெழுத்தில் எழுதி தட்டச்சு செய்வார்கள். பெரிய அதிகாரிகள் தான் பேச வேண்டிய கூட்டத்தில் பேசவேண்டியதை கூற சுருக்கெழுத்தாளர்கள் எழுதி தட்டச்சு செய்து கொடுப்பார்கள். எனவே இதுகுறித்து தெரியாத மாணவர்களும் இனி சுருக்கெழுத்து பயில அருகே உள்ள பயிற்சி நிலையத்தை நாட வேண்டும்.

சுருக்கெழுத்து தேர்வு எழுத குறைந்தது 10ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். 9ஆம் வகுப்பு படிக்கும் போதே சுருக்கெழுத்து பயில ஆர்வம் உள்ள மாணவர்கள் வந்துவிடுகிறார்கள். இதனை படிக்க வயது என்பது தடை கிடையாது. சுருக்கெழுத்து ஆங்கிலம் படிக்க பிட்மேன் முறையும் தமிழுக்கு ஸ்ரீனிவாசராவ் முறை மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Jobs, Local News, Tirunelveli