முகப்பு /திருநெல்வேலி /

"ஓவியம் கற்க ஆசையா? ஈஸியா கத்துக்கலாம்" நெல்லை ஓவிய ஆசிரியர் அறிவுரை!

"ஓவியம் கற்க ஆசையா? ஈஸியா கத்துக்கலாம்" நெல்லை ஓவிய ஆசிரியர் அறிவுரை!

X
நெல்லை

நெல்லை ஓவிய ஆசிரியர்

Tirunelveli news| கோடை காலத்தில் செல்போனில் மூழ்கிக் கிடக்கும் குழந்தைகள் ஓவியங்கள் விளையாட்டு போன்றவற்றை கற்றுக் கொள்ளலாம் - ஓவிய ஆசிரியர்.

  • Last Updated :
  • Tirunelveli, India

ஓவியம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு நல்ல விஷயம் ஏனென்றால் அதற்கு மொழி தேவையில்லை, கஷ்டப்பட்டு செய்ய வேண்டியதும் இல்லை. கிறுக்கத் தெரிந்தாலே போதும், அதனால்தான் குழந்தைகள் பிறந்த சில வருடங்களிலேயே தாலில் கிறுக்கி படங்களை வரைய தொடங்கி விடுகின்றனர்.

குழந்தைகளின் ஓவிய திறமையை ஊக்கப்படுத்தி வருகிறார், திருநெல்வேலியைச் சேர்ந்த சிவராம் கலைக்கூடத்தின் ஓவிய ஆசிரியர் கணேசன். ஓவிய பயிற்சி குறித்து நம்மிடம் அவர் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர் எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் ஓவியம் முக்கியத்துவம் வாய்ந்தது. மருத்துவம் இன்ஜினியரிங் போன்ற படிப்பிற்கு ஓவியம் பயிற்சி பயனுள்ளதாக இருக்கும். இந்த படிப்புகளை படிக்கும் பொழுது ஓவியம் தெரிந்த மாணவர்கள் அசத்தி வருகின்றனர். குழந்தைகள் ஓவிய பயிற்சி மேற்கொண்டால் அடுத்த கட்டத்திற்கு எளிதாக செல்லலாம். காடுகளில் உள்ள பாறைகளில் இந்த இடங்களில் விலங்குகள் உள்ளன. இந்த இடங்களில் விலங்குகள் இல்லை என குறியீடுகள் போடப்பட்டிருக்கும்.

இவைகள் அனைத்துமே ஓவியங்கள் தான். இதற்காக எந்த மொழியும் அங்கு தேவையில்லை படங்களை பார்த்து மக்கள் விலங்குகள் உள்ளதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம்.குறிப்பாக கோடை காலத்தில் செல்போனில் மூழ்கிக் கிடக்கும் குழந்தைகள் ஓவியங்கள் விளையாட்டு போன்றவற்றை கற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் ஒரு மாதம் பயனுள்ளதாக மாணவர்களுக்கு கழியும் இவைகள் மாணவர்களின் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Painting, Tirunelveli