முகப்பு /திருநெல்வேலி /

பாளையங்கோட்டையில் கதை சொல்லி அசத்திய மாணவர்கள்.. வியந்து பார்த்த எழுத்தாளர்கள்!

பாளையங்கோட்டையில் கதை சொல்லி அசத்திய மாணவர்கள்.. வியந்து பார்த்த எழுத்தாளர்கள்!

X
கதை

கதை சொல்லிய மாணவர்கள்

Tirunelveli | திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க கூட்டத்தில் பள்ளி மாணவிகள் கதைகளைச் சொல்லி அசத்தினர்.

  • Last Updated :
  • Tirunelveli, India

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் திருநெல்வேலி கிளை அமைப்புக்கூட்டம்பாளையங்கோட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தலைமை தாங்கினார். பள்ளி மாணவியும் சிறார் எழுத்தாளருமான மு.சூடாமணி வரவேற்புரை நிகழ்த்தினார்.

சிறப்பு வருவாய் அலுவலரும் ஒழுங்கு நடவடிக்கைகள் ஆணையருமான சுகன்யா ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தக வாசிப்பு குறித்து பேசினார். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் எழுத்தாளர் கா.உதயசங்கர், சங்கத்தின் நோக்கங்கள் பற்றி கருத்துரையாற்றினார்.

சிறுவர்களின்முழுமையான ஆளுமை வளர்ச்சி சார்ந்தும் குறிப்பாக கலை, இலக்கிய மேம்பாடு சார்ந்தும் செயல்படுவதே இதன் முதன்மையான நோக்கம். அனைத்துக் குழந்தைகளும் தாய்மொழியில் தவறில்லாமல் பேச, வாசிக்க, எழுதுவதற்கு கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கு தேவையான முயற்சிகளைச் செய்ய வேண்டியது அவசியம் என்றார்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

1 .திருநெல்வேலியில் மீண்டும் சிறுவர் நூலகத்தை மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தித்தர வேண்டும்.

2 .தலைநகர் சென்னையில் சிறார் புத்தகக்காட்சி (மூன்று நாட்கள்) நடத்த மாநில அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

3 . பாளையங்கோட்டை மேலக்கோட்டைவாசலில் புதிதாக அமைக்கப்பட்ட எல்ஈடி திரையில், சனி, ஞாயிறு தினங்களில் குழந்தைகள் திரைப்படங்கள் திரையிட மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் திருநெல்வேலி கிளையின் தலைவராக சிவ.சத்தியவள்ளி அவர்களும், செயலாளராக சுரேஷ், பொருளாளராக பிரியதர்ஷினி, துணைத்தலைவராக எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன், துணை செயலாளராக நாடக இயக்குனர் சந்திரமோகன் மற்றும் கவிஞர் கணபதி சுப்ரமணியன், கவிஞர் சுப்பையா, அருண்பாரதி, ஆனந்தி, ஜெயலட்சுமி, தேவர்பிரான், சிற்பிபாமா, நல்நூலகர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட 12 செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

top videos

    கூட்டத்தில், ஜோசப் பள்ளி மாணவ,மாணவியர்கள் கலந்து கொண்டு கதைகள் சொன்னார்கள். முத்தமிழ் பள்ளி சேர்மன் அமரவேல்பாபு, கவிஞர் கணபதி சுப்ரமணியன், வண்ணமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் நன்றி கூறினார்.

    First published:

    Tags: Local News, Tirunelveli