முகப்பு /திருநெல்வேலி /

தமிழ்நாடு பட்ஜெட் 2023 : நெல்லை பெண்களின் எதிர்பார்ப்புகள் இவைதான்!

தமிழ்நாடு பட்ஜெட் 2023 : நெல்லை பெண்களின் எதிர்பார்ப்புகள் இவைதான்!

X
மாதிரி

மாதிரி படம்

Tirunelveli News | தமிழ்நாடு பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் நெல்லை பெண்களின் எதிர்பார்ப்புகள் என்ன? விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

தமிழ்நாடு அரசின் 2023-24ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் நாளை தாக்கல் செய்கிறார். இதில் பல்வேறு சிறப்பு அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், திருநெல்வேலியை சேர்ந்த பெண்கள் தாங்கள் விரும்பும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் இருக்குமா? என்று ஆவலோடு காத்து இருக்கிறார்கள்.

பெண்களுக்காக தனி பட்ஜெட்டாக வரவேண்டும், இதில் பல்வேறு வகையில் பெண்களின் மேம்பாட்டிற்கான அறிவிப்புகள் இடம் பெற வேண்டும் என்கிறார் மீனா. இதுகுறித்து அவர் நம்மிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், “பெண்களின் உரிமை தொகை 1000 ரூபாய் இந்த முறை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். உயர்கல்வி பயில மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும். பணி நிமித்தமாகவும் கல்வியின் பொருட்டும் வரும் பெண்களுக்கு மிகச் சவாலாக இருப்பது தங்குமிடம்.

இதையும் படிங்க : திருநெல்வேலி வழியாக தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..

மிகக் குறைவான கட்டணம் கொண்ட, தனியார் விடுதிகளில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு. இந்நிலையில், முதலமைச்சருடைய முதல் கவனத்தில் பெண்களுக்கான புதிய தங்கும் விடுதிகள் அமைக்க வழிவகை செய்ய வேண்டும். பெண்களுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். அதாவது, சாலையோரத்தில் கடை போட்டு இருக்கும் பெண்களுக்கு மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும் கட்டிடங்களில் 10% வரை கடைகள் ஏற்படுத்தி தர வேண்டும்.

அதில், மானிய விலையில் மின்சாரம் கேஸ் உள்ளிட்டவை கொடுக்க வேண்டும். சாலை ஓரமாக கடை வைத்திருப்பதால் தங்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன. இதனை கருத்தில் கொண்டு அதிகமான கடைகளை மாவட்ட முழுவதும் உள்ள பெண்களுக்கு ஒதுக்க வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டார்.

First published:

Tags: Local News, Tirunelveli, TN Budget 2023