முகப்பு /திருநெல்வேலி /

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் தமிழ் கலை திருவிழா.. 

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் தமிழ் கலை திருவிழா.. 

நெல்லை அரசு அருங்காட்சியகம்

நெல்லை அரசு அருங்காட்சியகம்

Nellai Government Museum | நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் வேனில் காலத் தமிழ் கலைத் திருவிழா நடந்தது.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் வேனில் காலத் தமிழ் கலைத் திருவிழா திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், கற்பக விருட்சம் நற்பணி மன்றம் இணைந்து இந்த கோடை விடுமுறை யில் மாணவர்கள் தங்களின் திறமைகளை வளர்த்து கொள்ளும் வகையில் 15.05.2023 முதல் 21.05.2023 வரை தினசரி மாலை 03.30 மணி முதல் 05.30 மணி வரை வேனில் தமிழ் கலைத்திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நடைபெற இருக்கும் நிகழ்வுகள் :

15.05.2023 - திங்கள்

ஓவியப்போட்டி - ஆதித் தமிழரின் அழகுக் கலைகள். நூல் அறிமுகம், மௌனம் துறக்கும் பெண்மை (கவிதை நூல்) நூலாசிரியர் : செல்வி செ.நாகநந்தினி பெரியகுளம், தேனி மாவட்டம்

16.05.2023 - செவ்வாய் 

மாறுவேடப் போட்டி, தமிழர் பாரம்பரியம் . சொற்பொழிவு_சிவ செல்வமாரிமுத்து (தலைப்பு : ஒரு காம்பில் இரு மலர்களே தமிழும் கலையும்).

17.05.2023 - புதன்

பேச்சுபோட்டி - நெஞ்சில் நிலைத்தத் தமிழும் கலையும். விவாத அரங்கம்_இன்றய சூழலில் தமிழின் வளர்ச்சிக்கு செய்ய வேண்டியன யாது...? 18.05.2023_வியாழன்

உடனடி கவிதைப் போட்டி பட்டிமன்றம்_தமிழ் வாழ்வியலில் அதிகம் முக்கியத்துவம் பெறுவது மொழியா...? கலையா...?

19.05.2023 - வெள்ளி

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, முதல் 5 அதிகாரங்கள். கவியரங்கம், வானளாவ புகழ் கொண்ட தமிழும் கலையும் வாழ்க

20.05.2023 - சனி

தமிழர் வளர்த்த கலைகள், கட்டுரை போட்டி

நூல் திறனாய்வு, நூல் : அனைவருக்கும் லட்சியம் நூலாசிரியர் : முனைவர் த.ஜான்சி பால்ராஜ்

ஆசிரியர், எழுத்தாளர். ஆய்வாளர் : பகவதி

21.05.2023 - ஞாயிறு

கலைநிகழ்ச்சிகள் மற்றும் பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் அனைத்து வயதினரும் கலந்து கொள்ளலாம்.

போட்டிகளில்முதல் 3 இடங்களைப் பெறுவோருக்குப் பரிசுகளும் முதல் 20 இடங்களைப் பெறுவோருக்கு பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படும்.

நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

போட்டிகளில் கலந்து கொள்ளவும், நிகழ்வு குறித்தமேலும் விபரங்களைத் தெரிந்து கொள்ள 9488362921 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Tirunelveli