முகப்பு /திருநெல்வேலி /

திருநெல்வேலியில் நீச்சல் கத்துக்க இப்படி ஒரு இடமா? 

திருநெல்வேலியில் நீச்சல் கத்துக்க இப்படி ஒரு இடமா? 

X
மாதிரி

மாதிரி படம்

Swimming Training Camp in Nellai | நெல்லையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருநெல்வேலி பிரிவு சார்பில் நீச்சல் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.

  • Last Updated :
  • Tirunelveli, India

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருநெல்வேலி பிரிவு சார்பில் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கம், சீவலப்பேரிசாலையில் உள்ள 50 மீட்டர் நீச்சல் குளம் ஆகியவற்றின் கோடைக்கால விடுமுறை முன்னிட்டு நீச்சல் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.

இம்முகாம் ஜூன் 4ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் கட்ட பயிற்சி முகாம் மே 7ம் தேதி வரை நடைபெற்றது. 2ம் கட்ட பயிற்சி முகாம் மே 9ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெறும். 3ம் கட்ட பயிற்சி முகாம் மே 23ம் தேதி முதல் ஜூன் 4ம் தேதி வரை நடைபெற உள்ளது. தினமும் காலை 6 முதல் 7மணி வரையும், 7.15 முதல் 8.15 மணி வரையும், 8.30 முதல் 9.30 மணி வரையும், பிற்பகலில் 3.30 முதல் 4.30 மணி வரையும், மாலை 5.30 முதல் 6.30மணி வரையும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

நீச்சல் பயிற்சி

நீர்நிலைகளிலிருந்து ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்து கொள்வதற்கு நீச்சல் தெரிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும். நீச்சல் கற்றுக்கொள் திட்டத்தின் கீழ் சிறுவர் சிறுமியர்கள் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் சேர்ந்து பயன்பெறுமாறு மாவட்ட விளையாட்டு அலுவலர் கிருஷ்ண சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வீதம் 12 நாட்களுக்கு எளிதாக நீச்சல் கற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீச்சல் கற்றுக்கொள்ள திட்டத்தில் சேர ஒருவருக்கு 1,770 ரூபாய் கட்டணம் ஆகும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் 0462/2572632 நீச்சல் பயிற்று நரையும், 97874 05951 மற்றும் 8884663271 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Tirunelveli