நெல்லையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருநெல்வேலி பிரிவு சார்பில் நீச்சல் பயிற்சி முகாம் தொடங்கியது.
இது தொடர்பாக மாவட்ட விளையாட்டு இளைஞர் நலன் அலுவலர் கிருஷ்ண சக்கரவர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருநெல்வேலி பிரிவு சார்பில் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கம், சீவலப்பேரிசாலையில் உள்ள 50 மீட்டர் நீச்சல் குளம் ஆகியவற்றின் கோடைக்கால விடுமுறை முன்னிட்டு நீச்சல் பயிற்சி முகாம் தொடங்கியுள்ளது.
இம்முகாம் ஜூன் நான்காம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் கட்ட பயிற்சி முகாம் வரும் மே 7ஆம் தேதி வரையும் இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் மே 9ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரையும் மூன்றாம் கட்ட பயிற்சி முகாம் மே 23 முதல் ஜூன் நான்காம் தேதி வரையும் நடைபெற உள்ளது. தினமும் காலை 6 முதல் 7மணி வரையும்7.15 முதல் 8.15மணி வரையும்8.30 முதல் 9.30மணி வரையும், பிற்பகலில் 3.30 முதல் 4.30மணி வரையும்மாலை 5.30 முதல் 6.30மணி வரையும்பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
நீர்நிலைகளிலிருந்துஒவ்வொருவரும்தங்களைபாதுகாத்துக் கொள்வதற்கு நீச்சல் தெரிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும். நீச்சல் கற்றுக்கொள் திட்டத்தின் கீழ் சிறுவர் சிறுமியர்கள் மாணவ மாணவிகள் பொதுமக்கள் சேர்ந்து பயன்பெறலாம். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வீதம் 12 நாட்களுக்கு எளிதாக நீச்சல் கற்றுக் கொள்ளலாம். நீச்சல் கற்றுக்கொள்ளதிட்டத்தில் சேர ஒருவருக்கு 1,770 ரூபாய் கட்டணம் ஆகும்.
ALSO READ | தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நெல்லையில் 2 நாள் தொழில் பயிற்சி முகாம் - இன்று தொடக்கம்!
மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் 0462/2572632 நீச்சல் பயிற்று நரையும் 97874 05951 மற்றும் 8884663271 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Nellai, Swimming Trainer, Tirunelveli