நவீன கால வாழ்க்கை அத்தியாவசிய தேவைகளுக்காக உழைப்பிலேயே அதிக நேரத்தை செலவிடும் நிலைக்கு மனிதர்களை தள்ளுகிறது. முறையான உணவும், போதிய உடற்பயிற்சியும் தேவை என்பதை மருத்துவர்களும், மருத்துவ ஆய்வுகளும் வலியுறுத்துவதும் தொடர்ந்து வருகிறது.
அதன்படி, விளையாட்டுவதற்கு போதிய நேரம் கிடைக்காதவர்களும் வயதில் மூத்தவர்களும், நடைப யிற்சியை அவசியம் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருநெல்வேலி அண்ணா விளையாட்டு அரங்கில் மே மாதம் 2ம் தேதி முதல் 18ம் தேதி வரை 15 நாட்கள் கோடைகால பயிற்சி முகாம் இலவசமாக நடைபெற உள்ளதாக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கிருஷ்ணசக்கரவர்த்தி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “அண்ணா விளையாட்டு அரங்கில் மே மாதம் 15 நாட்கள் கோடைகால பயிற்சி முகாமில் ஃபுட்பால், ஹாக்கி, வாலிபால், அத்தலடிக், பேஸ்கட்பால் உள்ளிட்ட விளையாட்டுகள் இலவசமாக பயிற்சியளிக்கப்படுகிறன. மாவட்டம் முழுவதும் உள்ள மாணவ மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் இதில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்” என தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும், அண்ணா விளையாட்டு அரங்கில் தினமும் உடற்பயிற்சி மேற்கொண்டு வரும் நபர்கள் கூறுகையில், “மாணவ-மாணவிகள் இந்த கோடை கால விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வேண்டும். குறிப்பாக விளையாட்டில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
செல்போன் நம்மை அடிமைப்படுத்துகிறது. அதிலிருந்து விடுப்பட்டு விளையாட்டில் கவனம் செலுத்தினால் நமது உடலும் உள்ளமும் நன்றாக இருக்கும் முக்கியமாக மாணவ, மாணவிகளுக்கு படிப்பு முடிந்த பிறகு வேலைவாய்ப்புக்கு அவர்கள் விளையாண்ட விளையாட்டு உதவும்” என தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirunelveli