முகப்பு /திருநெல்வேலி /

நாளை முதல் கத்திரி வெயில்... சூரியன் சுட்டெரிக்கப் போகுது... பாதுகாப்பா இருக்க இதை பண்ணுங்க..!

நாளை முதல் கத்திரி வெயில்... சூரியன் சுட்டெரிக்கப் போகுது... பாதுகாப்பா இருக்க இதை பண்ணுங்க..!

X
மே

மே 4 முதல் தொடங்கும் கத்திரி வெயில் - பாதுகாப்புடன் இருங்க மக்களே

Agni Natchathiram | நாளை முதல் கத்திரி வெயில் தொடங்க இருக்கும் நிலையில், மருத்துவர்கள் முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.

  • Last Updated :
  • Tirunelveli, India

கோடையின் உச்சமாக கருதப்படும் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் நாளை  தொடங்குகிறது.  மே 29ம் தேதி வரை வெயில் சுட்டெரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

மார்ச் முதல் ஜூன் வரையிலான கோடைக் காலத்தில் மே மாதம் மட்டும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும். இதுவே, கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர காலம் என்று குறிப்பிடப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டு கத்திரி வெயில் காலத்தில் வெயிலின் அளவு 100 டிகிரி பாரன்ஹீட் முதல் 117 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும் என தெரிகிறது. இந்த காலத்தில் குழந்தைகள், முதியோர், பெண்கள் மற்றும் நோயாளிகள் ஆகியோர் நண்பகல் நேரத்தில் வெளியே செல்வது தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதையும் படிங்க; Tamil Live Breaking News : மனோபாலா உடலுக்கு அமைச்சர் உதயநிதி அஞ்சலி

அதிக தண்ணீர் பருக வேண்டும் எனவும் நீர் சத்து பழங்களை சாப்பிட வேண்டும் என்றும்  அறிவுறுத்தியுள்ளனர். மேலும், சுத்தமான பருத்தி ஆடைகளை அணிவதுடன் வெளியே செல்லும்போது கத்திரி வெயிலின் தாக்கத்திலிருந்து காத்துக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

First published:

Tags: Summer, Summer tips