முகப்பு /செய்தி /திருநெல்வேலி / விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்: 6 பேரிடம் சேரன்மகாதேவி சார்-ஆட்சியர் விசாரணை...

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்: 6 பேரிடம் சேரன்மகாதேவி சார்-ஆட்சியர் விசாரணை...

6 பேரிடம் சேரன்மகாதேவி சார்-ஆட்சியர் விசாரணை

6 பேரிடம் சேரன்மகாதேவி சார்-ஆட்சியர் விசாரணை

Balveer singh | சார்-ஆட்சியர் முகமது சபீர் ஆலம் பற்களை பிடுங்கியது தொடர்பாக விசாரணை மேற்கொண்டார்.

  • Last Updated :
  • Tirunelveli, India

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக ஏ.எஸ்.பி மீது எழுந்த புகாரில் பாதிக்கப்பட்ட 6 பேரிடம் சேரன்மகாதேவி சார்-ஆட்சியர் முகமது சபீர் ஆலம் விசாரணை நடத்தினார்.

குற்ற வழக்குகளில் காவல் நிலையங்களில் விசாரணைக்கு வருபவர்களின் பற்களை அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பியாக இருந்த பல்வீர் சிங் பிடுங்கியதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், புகார் குறித்து மாநில மனித உரிமை ஆணையமும், சேரன்மகாதேவி சார்-ஆட்சியர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிவந்திபுரத்தைச் சேர்ந்த செல்லப்பா, இசக்கிமுத்து, மாரியப்பன், வேத நாராயணன் உள்ளிட்ட 6 பேரும் சேரன்மகாதேவி சார்-ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆஜரானார்கள். அவர்களிடம் சார்-ஆட்சியர் முகமது சபீர் ஆலம் பற்களை பிடுங்கியது தொடர்பாக விசாரணை மேற்கொண்டார்.

ஒவ்வொரு நபராக அழைக்கப்பட்டு அவர்களின் விளக்கங்களை எழுத்துப்பூர்வமாகப் பெறுவதுடன் வீடியோ பதிவும் செய்யப்படுகிறது. ஏற்கனெவே பாதிக்கப்பட்ட 4 பேரிடம் விளக்கங்கள் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்: சிவமணி

First published:

Tags: Thirunelveli