முகப்பு /திருநெல்வேலி /

இயற்பியல் பாடம்தான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.. நெல்லையில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் கருத்து..

இயற்பியல் பாடம்தான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.. நெல்லையில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் கருத்து..

X
நெல்லையில்

நெல்லையில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் 12 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்டத்தில் 12 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு எழுதுவதற்கு 6,879 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2023 24ம் ஆண்டுக்கான மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. குறிப்பாக பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப் பள்ளியில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5:20 மணிக்கு தேர்வு முடிந்தது. காலை 11 மணி முதல் மாணவ, மாணவிகள் சோதனை செய்யப்பட்டு பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

நெல்லையில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள்

அப்போது தேர்வர்கள் கம்மல், வாட்ச், செயின் போன்ற அணிகலன்கள் அணிந்து செல்லவும், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. துப்பட்டா அணிந்து செல்லவும் அனுமதிக்கவில்லை. எனவே நுழைவு வாயில் பகுதியில் மாணவிகள் தங்களது அணிகலன்களை கழற்றி பெற்றோரிடம் கொடுத்தனர்.ஹால்டிக்கெட், 2 புகைப்படம், அங்கீகரிக்கப்பட்ட ஆதார் போன்ற அடையாள அட்டை, சானிடைசர், ஸ்டிக்கர் ஒட்டப்படாத தண்ணீர் பாட்டில் இவற்றை மட்டும் கொண்டு செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மேலும், தேர்வு எழுதி முடித்துவிட்டு வெளியே வந்த மாணவ, மாணவிகள் இயற்பியல் பாடம் மட்டும் கடினமாக இருந்ததாகவும் மற்ற பாடங்கள் ஓரளவுக்கு எளிமையாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.

    First published:

    Tags: Local News, Tirunelveli