நெல்லை புத்தகத் திருவிழாவில் ஒரு நாளில் ஒரு புத்தகம் என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கல்லூரி சார்பில் இங்கேயே இருந்து புத்தகங்களை தயாரித்து மாணவர்கள் வெளியிடுகின்றனர்.
அந்த வகையில் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி ‘தன்னம்பிக்கை என்னும் பெருவரம்’ என்ற புத்தகத்தை தயாரித்து வெளியிட்டுள்ளனர். மாணவிகளின் படைப்புகளான கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் ஓவியங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
முன்னதாக, காலை 10 மணிக்கு ரேடியோ ஜாக்கி செல்வா அவர்கள் மாணவிகளுக்கு தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து, மாணவிகள் காலை 11 மணிக்கு எழுத ஆரம்பித்தனர். பின்னர் டைப் செய்து, பிரின்ட் செய்து புத்தகமாக உருவாக்கினார். இரவு 8 மணியளவில் திட்ட இயக்குனர் சுரேஷ் அந்த புத்தகத்தை வெளியிட, மாணவிகள் பெற்றுக் கொண்டனர். அப்போது, மாணவிகளுடன் பேராசிரியர் கார்த்திகாவும் இருந்தார்.
Read More : தேனி மதுராபுரி அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து.. இருவர் பலியான சோகம்!
இதேபோல் அருள்மிகு பன்னிருபிடி அய்யன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் முனைவர் இசக்கி ராஜா தலைமையில் மாணவ மாணவிகள் புத்தகத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். மாணவ மாணவிகள் ‘என்னை புரட்டிய புத்தகம்’ என்ற நூலை காலை 10 மணிக்கு எழுத ஆரம்பித்து இரண்டு மணிக்கு முடித்தனர்.
பின்னர் அதனை டைப் செய்து, பிரிண்ட் செய்து இரவு 8 மணிக்கு எழுத்தாளர் நாரும்புநாதர் கையால் வெளியிடவைத்து மாணவ மாணவிகள் பெற்றுக் கொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, School students, Thirunelveli