முகப்பு /திருநெல்வேலி /

கண்ணாடி பாட்டிலில் ஓவியம் வரையும் பயிற்சி - நெல்லை கல்லூரி மாணவிகள் அசத்தல்!

கண்ணாடி பாட்டிலில் ஓவியம் வரையும் பயிற்சி - நெல்லை கல்லூரி மாணவிகள் அசத்தல்!

X
கண்ணாடி

கண்ணாடி பாட்டிலில் ஓவியம் வரையும் மாணவிகள்

Tirunelveli | நெல்லை புத்தக திருவிழாவில் நடைபெற்ற கண்ணாடி பாட்டிலில்  ஓவியம் வரையும் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட கல்லூரி மாணவிகள் பாட்டிலில் அழகாக ஓவியங்களை வரைந்து அசத்தினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

நெல்லை புத்தக திருவிழாவில் நடைபெற்ற கண்ணாடி பாட்டிலில் ஓவியம் வரையும் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட கல்லூரி மாணவிகள் பாட்டிலில் அழகாக ஓவியங்களை வரைந்து அசத்தினர்.

ஆறாவது பொருநை நெல்லை புத்தக திருவிழாவில் கல்லூரி மாணவிகளுக்கான பயிற்சி பட்டறையில் கண்ணாடி பாட்டிலில் ஓவியம் வரைதல் பயிற்சி நடத்தப்பட்டது. இப்பயிற்சியினை மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி தொடங்கி வைத்தார். பயிற்சியில் கழிவுப் பொருள்களில் இருந்து கலைப் பொருள்களை தயாரிக்கும் பயிற்சியாக கண்ணாடி பாட்டிலில் அழகிய ஓவியம் வரைந்து அதை கலைப் பொருளாக மாற்றும் பயிற்சி நடத்தப்பட்டது.

இந்த பயிற்சியினை கைத்திறன் பயிற்றுனர் செல்லம்மாள் நடத்தினார். இதில், தூய இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரி மற்றும் சாராள் தக்கர் கல்லூரி மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கண்ணாடி பாட்டிலில் ஓவியங்கள் வரைந்தனர். இந்த பயிற்சின் போது பேராசிரியர்கள் மேரி சுகிர்தா பாண்டியன், செல்வ ஸ்ரீ மற்றும் அருங்காட்சியக பணியாளர் உலகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இது குறித்து, கைத்திறன் பயிற்றுனர் செல்லம்மாள் கூறுகையில் பொருநை. நெல்லைப் புத்தகத் திருவிழாவில் பயிற்சி பட்டறை ஒரு வாரமாக நடந்து கொண்டிருக்கிறது. அரசு அருங்காட்சியகம் நடத்தும் இந்த நிகழ்சியில், வெவ்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது இரண்டு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டு, பாட்டிலில் ஓவியம் வரைதல் குறித்து பயிற்சி பெற்றனர். அப்போது, மாணவிகள் கண்ணாடி பாட்டிலில் அழகாக ஓவியங்கள் வரைந்தனர். இவர்களுக்கு விரைவில் சான்றிதழ் வழங்கப்பட இருக்கிறது என்று தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Tirunelveli