முகப்பு /திருநெல்வேலி /

காட்டு விலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை.. களக்காடு வனத்துறை எச்சரிக்கை..

காட்டு விலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை.. களக்காடு வனத்துறை எச்சரிக்கை..

காட்டு விலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை

காட்டு விலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை

Kalakkadu Forest Department : நெல்லையில் வன உயிரினங்களை வேட்டையாடினால் வன சட்டப்படி தண்டிக்கப்படுவர் என களக்காடு வனச்சரக அலுவலர்  எச்சரித்துள்ளார்.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு வனச்சரகத்திற்கு உட்பட்ட கொழுந்து மாமலை காப்பு காட்டின் நிர்வாக எல்லைப் பகுதியில் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கே சுற்றித்திரிந்து கொண்டிருந்த கங்கனாகுளத்தை சேர்ந்த சிவசங்கர், கனகராஜ், சிறுவர் உட்பட மூவர் வனத்துறையினரை பார்த்ததும் தப்பி ஓடி உள்ளனர்.

இதனையடுத்து மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் மூவரும் மிளாவை வேட்டையாடியது கண்டுபிடிக்கப்பட்டது. அழுகிய நிலையில் மிளாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மேலும் பிடிபட்ட சிவசங்கர் கனகராஜ் இருவரையும் சேரன்மகாதேவி குற்றவியல் நீதித்துறை நடுவர்முன் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பிடிபட்ட சிறுவன் திருநெல்வேலி சிறார் நீதி வாரியம் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மேலும் வன உயிரினங்களை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம். இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டம் மூலம் தண்டிக்கப்படுவர் என களக்காடு வனச்சரக அலுவலர்எச்சரித்துள்ளார்.

    First published:

    Tags: Local News, Tirunelveli