முகப்பு /திருநெல்வேலி /

திருநெல்வேலி வழியாக தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..

திருநெல்வேலி வழியாக தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..

மாதிரி படம்

மாதிரி படம்

Special Train : திருநெல்வேலி வழியாக தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து திருநெல்வேலி வழியாக தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, கொச்சுவேலியில் இருந்து தாம்பரத்திற்கு மார்ச் 19ம் தேதி ஒருவழி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், “கேரள மாநிலம் திருவனந்தபுரம் கொச்சுவேலியில் இருந்து மார்ச் 19ம் தேதி மாலை 5.15 மணிக்கு புறப்படும் ஒரு வழி சிறப்பு ரயில் மறுநாள் (மார்ச் 20) காலை 8 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது.

இந்த ரயில் திருவனந்தபுரம், நாகர்கோவில் நகர், திருநெல்வேலி, வள்ளியூர், சாத்தூர், விருதுநகர், கோவில்பட்டி, திருச்சி, திண்டுக்கல், விருத்தாச்சலம், விழுப்புரம், மதுரை, செங்கல்பட்டு, கோட்டை வழியாக இயக்கப்படுகிறது. அதன்படி, நாளை (மார்ச் 19ம் தேதி) இரவு 10 மணிக்கு இந்த ரயில் திருநெல்வேலி வழியாகச் செல்கிறது.

இதையும் படிங்க : தமிழகத்தில் ஏன் இந்துக் கோவில்களை இடிக்கிறீர்கள் என வட இந்தியர் கேட்டார்- போலி தகவல்கள் குறித்து திருமாவளவன் வேதனை

நாளை (மார்ச் 19ம் தேதி) அன்று மட்டுமே இந்த ரயில் இயக்கப்படுகிறது. இதற்கு அடுத்ததாக இயக்கப்படுவது குறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் விரைவில் அறிவிப்பு வெளியிடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Southern railway, Tirunelveli