முகப்பு /திருநெல்வேலி /

சனிப்பிரதோஷத்தில் வரும் சிவராத்திரிக்கு அப்படி என்ன சிறப்பு? திருநெல்வேலி ஆன்மீக சொற்பொழிவாளர் சொன்ன சுவாரஸ்ய தகவல்..

சனிப்பிரதோஷத்தில் வரும் சிவராத்திரிக்கு அப்படி என்ன சிறப்பு? திருநெல்வேலி ஆன்மீக சொற்பொழிவாளர் சொன்ன சுவாரஸ்ய தகவல்..

X
சனிப்பிரதோஷத்தில்

சனிப்பிரதோஷத்தில் சிவராத்திரி அப்படி என்ன சிறப்பு?

Sivarathri : சிவராத்திரியின் சிறப்புகள் பற்றி திருநெல்வேலியில் ஆன்மீக சொற்பொழிவாளர் சொல்லும் சுவாரஸ்ய தகவல்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

சனிப்பிரதோஷத்தில் சிவராத்திரியின் சிறப்பு பற்றி திருநெல்வேலியில் ஆன்மீக சொற்பொழிவாளர் சொல்லும் தகவல்கள் பற்றி பார்க்கலாம்.

சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷத்தை மகா பிரதோஷம் என அழைப்பர். அன்றைய நாளில் சிவபெருமானுக்கும், நந்திதேவருக்கும் கூட விசேஷ பூஜைகள் செய்யப்படும்.

நம்முடைய பாவம் நீக்கியருளும் சனி பிரதோஷ தினத்தில் சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அதனால் பல நன்மைகள் கிடைக்கும். சிவபெருமானுக்கு பிறகு நந்திதேவருக்கும் பூஜைகள் நடைபெறும். சனி பிரதோஷம் சிவராத்திரி தினத்தன்று வந்ததால் கூடுதல் சிறப்பு. சிவனுக்கு நடைபெறும் அபிஷேகத்தை தரிசித்தால், பாவமெல்லாம் கரையும் என ஆன்மீகம் அறிந்த பெரியோர் சொல்கின்றனர். மாசி மாதத்தில் வரும் இந்த சனி பிரதோஷம் விசேஷமானது. இதற்கு திருவோணம், சிவராத்திரி ஆகியவை கொண்டாடப்படுவது முக்கிய காரணம்.

இதுகுறித்து திருநெல்வேலியில் ஆன்மீக சொற்பொழிவாளர் முருகேசன் கூறுகையில், “சிவராத்திரி சனி பிரதோஷ தினத்தில் வந்திருக்கிறது. எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு சனி பிரதோஷம் வருவது சிறப்பு. சிவராத்திரி அன்று நான்கு கால பூஜையை அம்பாள் செய்கிறாள். நாமும் சிவனையும் அம்பாளையும் நினைத்து சிவராத்திரி அன்று வழிபட வேண்டும்.

இன்று கண்ணப்பருக்கு முத்தி கொடுத்த நாள். திருமாலுக்கும் பிரம்மனுக்கும் அண்ணாமலையில் காட்சி கொடுத்த நாள். இந்த மாதிரி பல சிறப்புகளை பெற்றது சனி பிரதோஷத்தில் வரும் சிவராத்திரி. எனவே மகா சிவராத்திரி அன்று பக்தர்கள் அனைவரும் கண்விழித்து இறைவனை வழிபட வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Maha Shivaratri, Tirunelveli