முகப்பு /திருநெல்வேலி /

நெல்லையில் தமிழும், கலையும் என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு!

நெல்லையில் தமிழும், கலையும் என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு!

X
மாதிரி

மாதிரி படம்

Tirunelveli Government Museum : திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் வேனில் கால தமிழ் கலை திருவிழாவில் தமிழும் கலையும் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவை ஆசிரியர் செல்வ மாரிமுத்து நிகழ்த்தினார்.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், கற்பக விருட்சம் நற்பணி மன்றம் இணைந்து இந்த கோடை விடுமுறையில், மாணவர்கள் தங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வகையில் 15.05.2023 முதல் 21.05.2023 வரைதினசரி மாலை 03.30 மணி முதல் 05.30 மணி வரை வேனில் தமிழ் கலைத்திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது.

16.05.2023 செவ்வாய்அன்று மாறுவேட போட்டி மற்றும் ஒரு காம்பில் இரு மலர்களே என்ற தலைப்பில் ஆசிரியர் சிவ செல்வ மாரிமுத்துவின் சொற்பொழிவும் நடைபெற்றது. அப்போது, பேசிய ஆசிரியர் சிவசெல்வ மாரிமுத்து, தமிழ் மொழியில் இருக்கக்கூடிய ஒவ்வொரு எழுத்துக்கும் சிறப்புகள் உள்ளன.

நெல்லையில் நடைபெற்ற சொற்பொழிவு

முக்கியமாக 'வே' என்ற வார்த்தை ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அதை எப்படி கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை. 'வே' என வரக்கூடிய வார்த்தைகள் எல்லாமே மறைந்தே இருக்கும் குறிப்பாக வேடன், வேடம் உள்ளிட்ட வார்த்தைகள் ஆகும். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியும் நமது கலையும் ஒரே காம்பில் இரு மலர்களே எனத் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Local News, Tirunelveli