முகப்பு /திருநெல்வேலி /

நெல்லையில் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இன்று சிறப்பு போட்டி.. எப்படி கலந்துகொள்ள வேண்டும் தெரியுமா?

நெல்லையில் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இன்று சிறப்பு போட்டி.. எப்படி கலந்துகொள்ள வேண்டும் தெரியுமா?

மாதிரி படம்

மாதிரி படம்

Nellai Competition | நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிறப்பு போட்டிகள் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

  • Last Updated :
  • Tirunelveli, India

நெல்லை அரசு அருங்காட்சியகமும் சிங்கம்பட்டி மாமன்னர் டி என் எஸ் முருகதாஸ் தீர்த்தபதி மகாராஜா நினைவேந்தல் குழுவும் இணைந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிறப்பு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

இன்று  மாலை 4 மணி அளவில் நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் இப் போட்டிகள் நடைபெறும். lkg முதல் இரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு சிங்கம்பட்டி அரண்மனையின் படத்திற்கு வண்ணம் தீட்டுதல் போட்டியும் வகுப்பு மூன்று முதல் ஐந்து வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பழந்தமிழரின் ஆயுதமாக வளரியை வரையும் ஓவியபோட்டியும் வகுப்பு ஆறு முதல் 12 வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு சிங்கம்பட்டி சமஸ்தான வரலாறு என்கிற தலைப்பில் கட்டுரை போட்டியும் நடைபெற உள்ளன.

இப்போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகளுக்கு வரைவதற்குவரைபடத்தாள் மற்றும் எழுதுவதற்கு காகிதங்களும் வழங்கப்படும். வைத்து எழுவதற்கு அட்டையும் எழுது பொருள்களும் மாணவர்களே கொண்டுவர வேண்டும் .

ஒவ்வொரு பிரிவிலும் மூன்று வெற்றியாளர்களுக்கு பரிசுகளும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும். இப் போட்டிகளில் கலந்துகொள்ள விரும்புவோர் 7502433751 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Nellai