முகப்பு /திருநெல்வேலி /

நெல்லை அருங்காட்சியகத்தில் குட்டீஸ்களுக்கு என்னென்ன போட்டி வச்சாங்க தெரியுமா?

நெல்லை அருங்காட்சியகத்தில் குட்டீஸ்களுக்கு என்னென்ன போட்டி வச்சாங்க தெரியுமா?

மாணவர்களுக்கு பரிசு

மாணவர்களுக்கு பரிசு

Nellai special competition | நெல்லை அருங்காட்சியகத்தில் நடைபெற்ற சிறப்பு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், சிங்கம்பட்டி மாமன்னர் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி மகாராஜா நினைவேந்தல் குழு சார்பில் சிங்கம்பட்டி மாமன்னர் டி.என்.எஸ்.முருகதாஸ் தீர்த்தபதி ராஜா மூன்றாம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவர்களுக்கான சிறப்பு போட்டிகள் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது.

எல்கேஜி, யுகேஜி, இரண்டாம் வகுப்பு வரை சிங்கம்பட்டி அரண்மனை படத்திற்கு வண்ணம் தீட்டுதல் போட்டியும், மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பழந்தமிழர்களின்போர் கருவியாகிய வளரியை பார்த்து வரையும் போட்டியும், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவியருக்கு சிங்கம்பட்டி சமஸ்தான வரலாறு என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும் நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டார்கள்.

இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. அரசு அருங்காட்சியக காப்பாட்சியர். சிவ சத்தியவள்ளி தலைமை தாங்கினார். வந்திருந்தவர்களை சிங்கம்பட்டி மாமன்னர் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தப்பதி மகாராஜா நினைவேந்தல் குழு செயலாளர் கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக நினைவேந்தல் குழு தலைவர் தாயுமான சுந்தரம் கலந்து கொண்டு சிங்கம்பட்டி மாமன்னர் சிறப்புகள் குறித்து சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் கவிஞர் பாப்பாக்குடி.இரா. செல்வமணி, நல்நூலகர் முத்துகிருஷ்ணன்,கவிஞர் முத்துசாமி, பத்தமடை ஆசிரியர் அருணாச்சலம், ஓவியர் தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவியர்களுக்கு பரிசுகளும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Nellai