முகப்பு /திருநெல்வேலி /

நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகை - சிறப்பு முகாம்களை அறிவித்த திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்

நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகை - சிறப்பு முகாம்களை அறிவித்த திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்

மாதிரி படம்

மாதிரி படம்

Tirunelveli News | திருநெல்வேலியில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்க மாவட்ட ஆட்சியர் சிறப்பு முகாம்.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசாங்க திட்டங்களுக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களுக்கான இழப்பீட்டு தொகை வழங்க சிறப்பு முகாம்கள் 10.04.2023 முதல் 13.04.2023 வரை நடைபெறுகிறது.

இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியார் இணைப்பு திட்டம், சென்னை கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டங்கள், நெடுஞ்சாலைத்துறை மற்றும் தமிழ்நாடு சாலை விரிவாக்க திட்டம் ஆகிய திட்டங்களுக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களுக்கான இழப்பீடு தொகை வழங்க சிறப்பு முகாம்கள் ஏப்ரல் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, நாங்குநேரி, திசையன்விளை, ராமநாதபுரம், மானூர் மற்றும் திருநெல்வேலி வட்டாட்சியர் அலுவலகங்களில் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே தொடர்புடைய பட்டாதாரர்கள் பட்டா நகல், வில்லங்கச் சான்று, கிறைய ஆவணம் , மூல ஆவணம், வாரிசு அடிப்படையில் பெற்ற நிலம் எனில் இறப்புச் சான்று மற்றும் வாரிசு சான்று, வங்கி கணக்கு புத்தக நகல் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் நேரில் ஆஜராகி சரியான ஆவணங்கள் சமர்ப்பித்து இழப்பீட்டுத் தொகை இணை பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இறப்பு சான்று வாரிசு சான்று பட்டா நகல் தேவைப்படுவோர் உரிய அசல் ஆவணங்களுடன் வந்தால் சான்றுகள் பெறுவதற்கான வழிகாட்டுதல் வழங்கப்பட்டு உரிய சான்றிதழ்கள் விரைந்து வழங்கப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்” என தெரிவித்துள்ளார்.

top videos
    First published:

    Tags: Local News, Tirunelveli