முகப்பு /திருநெல்வேலி /

நெல்லையிலும் கலைஞர் நூலகம்? - சபாநாயகர் அப்பாவு சொன்ன சேதி

நெல்லையிலும் கலைஞர் நூலகம்? - சபாநாயகர் அப்பாவு சொன்ன சேதி

X
அப்பாவு

அப்பாவு

Tirunelveli Book fair | திருநெல்வேலியில் கலைஞர் நூலகம் அமைக்க மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கைவைத்துள்ளேன் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலியில் புத்தகத் திருவிழாவில் பேசிய சபாநாயகர் அப்பாவு, நெல்லையிலும் கலைஞர் நூலகம் அமைக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் இடம் கோரிக்கை வைத்தேன். தற்போது அது பரிசீலனையில் உள்ளது என தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசின் பொருநை நெல்லை புத்தகத் திருவிழா பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் தொடங்கியது. புத்தகத் திருவிழா மார்ச் 7ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. புத்தகத் திருவிழாவில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். உதவி ஆட்சியர் கோகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . சபாநாயகர் அப்பாவு நேரில் கலந்து கொண்டார். வீடியோ காணொளி மூலம் அமைச்சர் ராஜ கண்ணப்பன் கலந்து கொண்டார். இதில் சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன், வருவாய் அலுவலர், கோட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முதலில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சபாநாயகர் அப்பாவு கலையரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்டால்களை பார்வையிட்டனர். குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு என 25க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து புத்தகத் திருவிழாவை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து குத்து விளக்கு ஏத்தினர். பின்னர் அவர்கள் புத்தக அரங்குகளைப் பார்வையிட்டனர். 110க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

அனைத்தையும் பார்வையிட்ட அவர்கள் அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் உரையாற்றினர். அப்போது பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன், பள்ளிகளில் செல்போனை பயன்படுத்த மாவட்ட ஆட்சியர் தடை விதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், மாணவர்கள் நன்கு படித்து உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பயன்பாடற்ற பொருள்களிலிருந்து பொம்மைகள் செய்தல்- ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள்

அவரைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, மதுரையில் 114 கோடி ரூபாயில் கலைஞர் நூலகம் அமைக்கப்பட்டது போல் நெல்லையிலும் கலைஞர் நூலகம் அமைக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் இடம் கோரிக்கை வைத்தேன். தற்போது அது பரிசீலனையில் உள்ளது என தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Tirunelveli