முகப்பு /திருநெல்வேலி /

சிட்டுக்குருவிகளின் அழிவிற்கு டெக்னாலஜி மட்டும் தான் காரணமா?- நெல்லை பறவைகள் ஆர்வலர் விளக்கம்...

சிட்டுக்குருவிகளின் அழிவிற்கு டெக்னாலஜி மட்டும் தான் காரணமா?- நெல்லை பறவைகள் ஆர்வலர் விளக்கம்...

X
நெல்லை

நெல்லை பறவைகள் நல ஆர்வலர்

World Sparrow Day | சிட்டுக்குருவிகளின் அழிவிற்கு டெக்னாலஜி மட்டும் தான் காரணமா? என்பகு குறித்து விளக்கம் அளிக்கிறார் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பறவைகள் ஆர்வலர் நிவேக்.

  • Last Updated :
  • Tirunelveli, India

சிட்டுக்குருவியின் உயரம் அதிகாபட்சமாக 16 சென்டிமீட்டர், நீளம் 21 சென்டிமீட்டர் அதன் எடை 25 முதல் 40 கிராம் வரை இருக்கும் என்கின்றனர். இதன் ஆயுட்காலம் நான்கு முதல் ஐந்து வருடங்கள் ஆகும். இதன் பறக்கும் வேகம் மணிக்கு 24 மைலாகும். டெல்லியின் மாநில பறவையாக 2012 ஆம் ஆண்டு சிட்டுக்குருவி அறிவிக்கப்பட்டது.

சீனா ஜப்பான் நாடுகளில் சிட்டுக்குருவிகள் காணப்படுவதில்லை. இந்தியா போன்ற நாடுகளில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தன்னார்வ தொண்டு அமைப்பை சேர்ந்த பறவைகள் ஆர்வலர் நிவேக், சிட்டுக்குருவிகளை பாதுகாப்பது குறித்து நம்மிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறியதாவது, அன்றாடம் நம் வீட்டின் அருகே பார்க்கக்கூடிய குருவிகளில் மூன்று வகைகள் உள்ளன. ஒன்று தேன்சிட்டு, அடைக்கலம் குருவி, மூன்றாவது தூக்கணாங்குருவி ஆகும். இவைகளுள், தூக்கணாங்குருவி குறிப்பிட்ட காலத்தில் நாணலை எடுத்து வந்து பனை மரத்தில் கூடு கட்டும். அந்த கூடை பார்க்கவே மிகவும் ரம்யமாக இருக்கும்.

இந்த கூடை ஆண் குருவி மட்டுமே கட்டும். ஆண் குருவியின் கூடு கட்டும் திறமையை பார்த்து பெண் குருவி ஜோடி சேரும். தூக்கணாங்குருவி கூட்டை சில வருஷங்களுக்கு முன்பு ஏராளமான பனை மரங்களிலும் நம்மால் பார்க்க முடிந்திருக்க முடியும். தூக்கணாங்குருவியின் குறைவிற்கு காரணம் பனை மரங்கள் அழிக்கப்பட்டது தான்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஓட்டு வீடு, கூரை வீட்டில் அடைக்கலம் குருவி வாழ்வதை பார்த்திருப்போம். இப்போது நாம் கான்கிரீட் வீடுகளை கட்டுவதால் அவைகளின் வரத்தும் குறைந்துவிட்டது. இது போன்று மனிதனின் செயல்களால் குருவிகளின் இனம் குறைந்துவிட்டது.

டெக்னாலஜியின் வருகை காரணத்தினால் தான் குருவி இனம் குறைந்தது என்று கூறுவதை விட, மனிதர்கள் செய்த சிறு சிறு தவறுகளால் தான் குறைந்து விட்டது குருவி இனம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். குருவி இனம் மட்டும்தான் புல், பூச்சிகளை வளர விடாமல் சாப்பிடும். இதன் காரணமாக விவசாய பயிர்களுக்கு நோய்கள் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.

top videos

    விவசாயிகள் தான் முக்கியமாக குருவி இனங்களை பாதுகாப்பதற்கு பங்களிக்க வேண்டும். விவசாயிகள் தங்களின் வயல் வரப்புகளில் மரங்களை நட்டால் தான், பறவைகள் வந்து அமரும். விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் இந்த குருவிகளை, தங்கள் வீட்டிற்கு வந்து செல்வதற்கான பானைகளை வைக்க வேண்டும். அரசு அதிகாரிகளும் தங்கள் அலுவலகங்களில் இது போன்று பானைகளை வைக்கலாம். குறிப்பாக, குருவிகளுக்கு தினை போன்ற உணவுகளை வைக்க முன்னெடுக்கலாம் என்று பறவைகள் ஆர்வலர் நிவேக் தெரிவித்தார்.

    First published:

    Tags: Local News, Tirunelveli