முகப்பு /திருநெல்வேலி /

போலீஸ் எஸ்ஐக்களை பாராட்டிய நெல்லை எஸ்.பி.. எதற்கு தெரியுமா?

போலீஸ் எஸ்ஐக்களை பாராட்டிய நெல்லை எஸ்.பி.. எதற்கு தெரியுமா?

போலீஸ் எஸ்ஐக்களை பாராட்டிய நெல்லை எஸ்.பி

போலீஸ் எஸ்ஐக்களை பாராட்டிய நெல்லை எஸ்.பி

Tirunelveli News : திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் புதிய நேரடி உதவி ஆய்வாளர்கள் 23 பேருக்கு மாவட்ட‌ காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.

  • Last Updated :
  • Tirunelveli, India

பயிற்சி முடித்து திருநெல்வேலி மாவட்டத்தில் பணியாற்றி வரும் 23 புதிய நேரடி உதவி ஆய்வாளர்களுடன் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,தகுதிகாண் பருவத்தில்இருக்கும் உதவி ஆய்வாளர்களுக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டன. அனைத்து சட்டங்கள் சம்மந்தமான அறிவினை வளர்த்து கொள்ள வேண்டும் எனவும் நிலையங்களில் புகார் அளிக்க வரும் மனுதாரர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

கைது நடவடிக்கை மேற்கொள்ளும் போது, கடைபிடிக்க வேண்டிய சட்ட விதிமுறைகள் குறித்தும், காவல் நிலைய ஆவணங்களை பராமரிப்பது குறித்தும், காவல் நிலைய பணிகளை சட்டப்படி எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டன. பின்பு,உதவி ஆய்வாளராக பொறுப்பேற்ற ஒரு மாதத்திலே குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் திருட்டு வழக்கில் ஈடுபட்டஎதிரிகளை கைது செய்ததற்காகவும், சொத்துக்களை விரைந்து மீட்டதற்காகவும், குற்றப்பத்திரிக்கை விரைவாக தாக்கல் செய்து சிறப்பாக பணிபுரிந்தமைக்காகவும் உதவி ஆய்வாளர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மேலும்,CCTNS பிரிவு உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசா, உதவி ஆய்வாளர்களுக்கு ஸ்மார்ட் காவலர் செயலி பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. மேற்படி சிறப்பாக பணிபுரிந்த மானூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர்கள் விஜயகுமார், நஸ்ரின், சிவந்திபட்டி காவல்நிலைய உதவி ஆய்வாளர்‌ மேகலா, முக்கூடல் காவல்நிலைய உதவி ஆய்வாளர்‌ ஆக்னல் விஜய், முன்னீர்பள்ளம்‌ காவல்நிலைய உதவி ஆய்வாளர் கயல்விழி, மற்றும் உவரி காவல்நிலைய உதவி ஆய்வாளர் நதியா ஆகியோரை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி ஊக்குவித்தார்.

    First published:

    Tags: Local News, Tirunelveli