முகப்பு /திருநெல்வேலி /

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் : பாளையங்கோட்டை சிறையில் இத்தனை பேர் தேர்ச்சியா?

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் : பாளையங்கோட்டை சிறையில் இத்தனை பேர் தேர்ச்சியா?

X
மாதிரி

மாதிரி படம்

Palayamkottai Jail : பிளஸ் 2 பொதுத்தேர்வில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தேர்ச்சியான கைதிகளின் விவரம்.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்டம் பாளைங்கோட்டை சிறை கைதிகள் பிளஸ் 2 தேர்வு எழுதியிருந்தனர்.

தமிழகத்தில் மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்திலும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் திருநெல்வேலி மாவட்டத்தில் 96. 61% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பாளையங்கோட்டை சிறை

அதன்படி மொத்தம் 19,722 பேர் தேர்வு எழுதிய நிலையில் 19,053 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆண்கள் 9,017 பேர் தேர்வெழுதிய நிலையில் 8,576 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர. பெண்கள் 10,705 பேர் தேர்வு எழுதிய நிலையில் 10,477 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து மாணவர்கள் அடுத்த கட்டமாக உயர் கல்வி படிப்பில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க : அச்சுறுத்தும் அரிசி கொம்பன்..! மேகமலைக்கு செல்ல தொடரும் தடை..!

இந்நிலையில், பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள விசாரணை கைதிகள் 7 பேர் பிளஸ் டூ பொதுத் தேர்வை எழுதினர். அதில் ஆறு பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். ஒருவர் மட்டுமே தேர்வுக்கு செல்லாததால் தோல்வி அடைந்துள்ளார்.

நாகூர் பிச்சை என்ற விசாரணை கைதி 513 மதிப்பெண்கள் பெற்று விசாரணை கைதிகளில் முதல் இடத்தை பிடித்தார்.

விசாரணை கைதியான பாபு 504 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடத்தை பிடித்துள்ளார். 476 மதிப்பெண்கள் பெற்று 3வது இடத்தை சந்தன பாண்டி என்ற விசாரணை கைது பிடித்துள்ளார். இதேபோல் விசாரணை கைதிகளான பிரபு மற்றும் பிரபாகரன் மற்றும் மாடசாமி ஆகியோர் 450-க்கும் மேல் மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Tirunelveli