முகப்பு /திருநெல்வேலி /

நெல்லை அருங்காட்சியகத்தில் சிலம்பம் பயிற்சி, அறிவு திறன் போட்டிகள்!

நெல்லை அருங்காட்சியகத்தில் சிலம்பம் பயிற்சி, அறிவு திறன் போட்டிகள்!

X
நெல்லை

நெல்லை அருங்காட்சியகம்

Nellai Museum : திருநெல்வேலியில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் உலக அருங்காட்சியக நாளை முன்னிட்டு ஏராளமான நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் உலக அருங்காட்சியக நாளை முன்னிட்டு ஏராளமான நிகழ்வுகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியின் துவக்கமாக அருங்காட்சியகங்களின் சிறப்புகள் பற்றி கவிஞர் சுப்பையா பாடல் பாடினார். நிகழ்ச்சியினை தலைமை ஏற்று நடத்திய திருநெல்வேலி மாவட்ட காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளிஅருங்காட்சியகங்கள் நிலைப்புத் தன்மை மற்றும் நல்வாழ்வு என்கிற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உலக அருங்காட்சியக நாள்சிறப்புபோட்டிகள் நடத்தப்பட்டன. அதில், அருங்காட்சியகத்தின் பயன்கள் என்கிற தலைப்பில் கட்டுரை போட்டியும் தமிழக அருங்காட்சியகங்கள் என்கிற தலைப்பில் பேச்சுப் போட்டியும் நெல்லை அருங்காட்சியகத்தில் உங்களுக்கு பிடித்த அரும்பொருள் என்கிற தலைப்பில் ஓவியப் போட்டியும் நடத்தப்பட்டன.

நெல்லை அருங்காட்சியகத்தில் சிலம்பம் பயிற்சி, அறிவு திறன் போட்டிகள்

போட்டிகளில் கலையாசிரியை சொர்ணம், ஆசிரியர் சிவ செல்வ மாரிமுத்து, மற்றும் ரம்யா ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் இப் போட்டிகளில் கலந்துகொண்டு அருங்காட்சியகத்தில் உள்ள அரும் பொருட்களை பார்த்து வரைந்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இப்போட்டிகளைநெல்லை அரசு அருங்காட்சியகத்துடன் ஆல் தி சில்ட்ரன் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ரீகன் மற்றும் சி சிஸ்டம் டிரஸ்ட் நிறுவனர் ரிப்ளிகா இணைந்து நடத்தினர்.

இதையும் படிங்க : சோற்று கற்றாழையில் அல்வா இப்படி செஞ்சா டேஸ்ட்டா இருக்கும்..! திருச்சி வியாபாரி சொன்ன சீக்ரெட் இன்க்ரீடியன்ட்..!

தொடர்ந்து நெல்லை அரசு அருங்காட்சியகத்தை பற்றி மாணவ மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் சிறப்பு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. முதலில் புதையல் வேட்டை என்கிற அறிவு சார்ந்த விளையாட்டில் அருங்காட்சியகத்தில் உள்ள ஒரு அரும்பொருளை சிறு குறிப்புகள் மூலம் மாணவர்கள் கண்டுபிடிக்கும் விளையாட்டு நடத்தப்பட்டது.

தொடர்ந்து அருங்காட்சியகத்தில் உள்ள பொருள்களின் மாறுபட்ட புகைப்படங்களை பார்த்து அப்பொருளின் இருப்பிடங்களை கண்டுபிடிக்கும் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது .இப்போட்டிகளை நடத்திய நெல்லை மாவட்ட காப்பாட்சியர்,நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் உள்ள அரும்பொருள்களின் முக்கியத்துவங்களை மாணவ மாணவிகள் உணர்ந்து கொள்ளும் வகையில் இப்போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன என்றார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    அடுத்ததாக மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட உடனடி கவிதை போட்டி நடைபெற்றது. அருங்காட்சியகம்; அருமையான காட்சி யகம் என்கிற தலைப்பில் இக்கவிதை போட்டிநடைபெற்றது.தொடர்ந்து திருமலை சிலம்ப பள்ளி மற்றும் ஆசாத் நேதாஜி சிலம்ப பள்ளி மூலமாகமாணவர்களுக்கு சிலம்பம் பயிற்சி அளிக்கப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    First published:

    Tags: Local News, Tirunelveli