முகப்பு /திருநெல்வேலி /

வாய் பேச முடியாதவர்களுக்காக 24 மணி நேரமும் செயல்படும் SignAble மொபைல் ஆப்..

வாய் பேச முடியாதவர்களுக்காக 24 மணி நேரமும் செயல்படும் SignAble மொபைல் ஆப்..

X
SignAble

SignAble மொபைல் ஆப்

Tirunelveli News | வாய் பேச முடியாதவர்களுக்காக 24 மணி நேரமும் செயல்படும் Sign Able செயலி குறித்து பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமை அலுவலமாக கொண்டு செயல்பட்டு வருகிறது சைன் ஏபில் கம்யூனிகேஷன். இந்நிறுவத்திற்கு சென்னை மற்றும் மத்திய பிரதேசத்தில் கிளைகள் உள்ளன. அதாவது வாய் பேச முடியாதவர்கள் இந்நிறுவனத்தின் SignAble என்ற ஆப்பை டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் அந்த ஆப் மூலம் தனக்குத் தெரிந்த நபர்களின் அலைபேசி என்ணை கிளிக் செய்து இந்த நிறுவனத்திற்கு கால் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் நபர் வாய் பேச முடியாதவரின் விளக்கத்தை எதிர் தரப்பில் உள்ள நபரிடம் தெரிவிப்பார். கால் சென்டர் போன்று செயல்படும் இந்நிறுவனத்தின் ஊழியர்களுக்கு வாய் பேசவும், வாய் பேசத் தெரியாதவரின் சைகை மொழியும் தெரியும்..

இந்த செயலியில் பணிபுரியும் நபரும் வாய் பேசத் தெரியாத வரும் வீடியோ காலில் இருப்பார்கள் எதிர்த்தரப்பில் உள்ளவர்க்கு சாதாரண காலில் அழைப்பு செல்லும். இந்த ஆப் கட்டண முறைப்படி செயல்படுகிறது. ஒரு நாளைக்கு 30 நிமிடம் வீதம் 180 நாள்கள் பேசுவதற்கு 75 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். நீங்கள் அதிகமாக பேச வேண்டும் என நினைத்தால் அதற்கு தகுந்தாற்போல் நான்கு வகையான கட்டண வாய்ப்புகள் உள்ளன.

பயனாளர்களுக்கு எளிமையாள இருக்கும் வகையில் குறைந்த விலையில் இந்த சேவையை செய்து கொடுக்கின்றனர் இந்நிறுவனத்தினர். இன்றைய நவீன உலகில் தொழில்நுட்பம் உலகில் பலவற்றை எளிமையாக்கியுள்ளது. வாய் பேச முடியாதவர்கள் மற்றவர்களிடம் பேசுவதற்கு சிரமப்படுகின்றனர். அதனை கருத்தில் கொண்டு இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதாக அதன் ஊழியர்கள் தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Technology, Tirunelveli