முகப்பு /திருநெல்வேலி /

நெல்லையப்பர் கோவிலில் விடிய, விடிய சிவராத்திரி வழிபாடு செய்த மக்கள்..

நெல்லையப்பர் கோவிலில் விடிய, விடிய சிவராத்திரி வழிபாடு செய்த மக்கள்..

X
நெல்லையப்பர்

நெல்லையப்பர் கோவில்

Tirunelveli Nellaiappar Temple | திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் இரவு முழுவதும் பக்தர்கள் கண்விழித்து சிவராத்திரி கொண்டாடினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

இந்திய அளவில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி டவுன் நெல்லையப்பர் - காந்திமதி அம்மாள் கோவிலில் சிவராத்திரியையொட்டி 6 கால பூஜைகள் நடைபெற்றன. இதனால் கோவில் நடை விடிய, விடிய திறக்கப்பட்டிருந்தது. மேலும் கோவில் வளாகத்தில் உள்ள நின்றசீர் நெடுமாறன் கலையரங்கத்தில் பக்தி சொற்பொழிவு, ஆன்மீக சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும் பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம், ஆன்மீகப் பட்டிமன்றம், பக்தி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடந்தன.

இதனையொட்டி கோவில் கோபுரங்கள், முகப்புகளில் அலங்கார விளக்குகள் பொருத்தப்பட்டு மின்னொளியில் ஜொலித்தன. கோவிலுக்கு சிவராத்திரி கொண்டாட வந்திருந்த மாணவி பாஞ்சாலி கூறுகையில், “2 ஆண்டு கொரோனா பாதிப்புக்கு பிறகு தற்போது கூட்டம் அதிகமாக உள்ளது. எல்லா மக்களும் சிவனின் தரிசனத்திற்காக வந்துள்ளனர். நாங்களும் அதேபோல் வந்துள்ளோம். சிவனை தரிசித்து விட்டோம். அலங்காரம் மிக அழகாக இருந்தது. இரவு ஆக ஆக கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கொஞ்சம் கூட குறையவில்லை. கோவில் யானை பார்த்தோம். மிக அழகாக இருந்தது. முதல் தடவை மகா சிவராத்திரியை கொண்டாடுகிறோம். காலை வரை முழித்து இருப்போம் என்று நம்புகிறோம்” என்றார்.

அதேபோல் மற்றொரு பக்தர் தனலட்சுமி கூறுகையில், “நான் ஜங்ஷனிலிருந்து வருகிறேன். மகா சிவராத்திரி விமர்சையாக நடக்கிறது. சொற்பொழிவு, பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காபி உள்ளிட்டவை கோயில் நிர்வாகம் சார்பில் கொடுக்கப்படுகிறது. நல்ல பாதுகாப்பு இருக்கிறது. சுற்றுப்புறம் சுத்தமாக உள்ளது” என்றார்.

First published:

Tags: Local News, Tirunelveli